கொரோனாவின் தாக்கம் இன்று உலகளவில் பரவி வரும் நிலையில், அதன் தாக்கத்தினால் உலகம் முழுக்க உள்ள மக்கள் பெரும் அழுத்ததிற்கு ஆளாகியுள்ளனர். ஏன் லட்சக் கணக்காக மக்கள் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கன் பரவ சீனா தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. எனினும் அதற்கு இன்று வரையில் அதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. சீனாவிலிருந்து வெளியேற மசோதா எனினும் பெரும்பாலான நாடுகள் சீனாவின் மீதான கோபத்தினை காட்ட, சீனாவினை விட்டு வெளியேற விரும்பின. இன்னும் சொல்லப்போனால், அமெரிக்கா இது குறித்தான ஒரு மசோதாவையே ஏற்படுத்தியது. ஆக இந்த மசோதா மூலம் தங்கள் உற்பத்தி நிறுவனங்களை சீனாவிலிருந்து மாற்ற அமெரிக்கா ஊக்குவித்தது. ஜப்பான் ஆதரவு அந்த சமயத்தில் ஜப்பானும் இதற்கு ஆதரவு கொடுக்கும் விதமாக சீனாவில் சாதகமான உள்கட்டமைப்புகள் இருந்த போதிலும், தங்களது எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவையாக இருந்து வருவதாக ஜப்பான் கூறியது. இதற்காக ஜப்பான் 2.2 பில்லியன் டாலரினை பொருளாதார தொகுப்பினையும் ஒதுக்குவதாக அறிவித்தது. எதற்காக சீனாவிலிருந்து மாற்றம்?. இதற்கிடையில் இன்று வெளியான ப்ளூம்பெர்க் செய்தியொன்றில், ஜப்பான் நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி சொந்த நாடுகளூக்கோ அல்லது தென் கிழக்கு ஆசியாவிற்கோ செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விநியோக சங்கிலியை பாதுகாப்பதற்கும், சீனாவில் உற்பத்தியைச் சார்ந்திருப்பதை குறைந்திருப்பதையும் ஒரு புதிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். சில நிறுவனங்களுக்கு மானியம் தனியாருக்கு சொந்தமான ஃபேஸ்மாஸ்க் தயாரிப்பாளர் ஐரிஸ் ஓஹாயாமா இன்க் மற்றும் ஷார்ப் கார்ப் உள்ளிட்ட ஐம்பத்தேழு நிறுவனங்கள் மொத்தம் 57.4 பில்லியன் யென், (536 மில்லியன் டாலர்) மானியமாக அரசாங்கத்திடமிருந்து பெறும் என்று பொருளாதார வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கும் மானியம் உண்டு வியட்நாம், மியான்மர், தாய்லாந்து மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தங்களது உற்பத்தியினை மாற்றுவதற்கு தயாராக உள்ள 30 நிறுவனங்களுக்கு தனி அறிவிப்புகள் வரும் என்றும் அறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்களுக்கு என்ன மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. இது தான் ஜப்பானின் நோக்கம் இந்த நிலையில் இந்த முறை 70 பில்லியன் யென் தொகையினை அரசு தரப்பில் செலுத்தப்படும் என்றும் நிக்கி செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இது சீனா விநியோக சங்கிலிகளின் நம்பகத்தன்மையைக் குறைக்க, ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம் ஒதுக்கிய 243.5 பில்லியன் யென்னிலிருந்து இந்த கொடுப்பனவுகள் வந்துள்ளன. சீனாவில் இருந்து ஏன் மாற்றம்? சில அறிக்கைகள் ஜப்பானின் இந்த அதிரடியான முடிவுகள், தைவானிய கொள்கைக்கு ஒத்ததாகும். ஜப்பானின் இந்த முடிவானது சீனாவிலிருந்து முதலீட்டினை தங்கள் நாடுகளுக்கு கொண்டு வருவதாகும் என்றும், இதுவரை வேறு எந்த நாடும் இது போன்ற கொள்கையினை அமல்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் வர்த்தக பங்காளி சீனா ஜப்பானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும். ஜப்பானிய நிறுவனங்கள் அங்கு மிகப்பெரிய முதலீடுகளைக் கொண்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் இவ்விரு நாடுகளின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 2012க்கு பிறகு சீனா ஜப்பான் உறவை மேம்படுத்த அந்த நாட்டு அரசு முயன்று வந்தாலும் கொரோனா வைரஸ் அதனை இன்னும் பிரச்சனைக்கு தள்ளியுள்ளது. இது சீனா ஜப்பான் உறவுகளுக்கு பாதகமாய் வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக