Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 ஜூலை, 2020

ஜூலை 24: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!


6.5-இன்ச் எச்டி
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் மாடலை ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.
ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி 12என்எம் பிராசஸர் வசதி உள்ளது,மேலும்
ஏஆர்எம் மாலி-ஜி76 3இஇஎம்சி4 ஜபியு வசதியுடன் ஆணட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த சாதனம், எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.
4 ஜி வோல்டிஇ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் /பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப் சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்
உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனம் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!