முகேஷ்
அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் குழுமத்தின் கிளை நிறுவனமான மாடெல்
எக்னாமிக் டவுன்ஷிப் லிமிடெட் (METL) நிறுவனத்துடன் இணைந்து ஜப்பான் நாட்டின்
முன்னணி ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனமான Tsuzuki, ஹரியானாவில்
ஜஜ்ஜர் பகுதியில் தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
ரிலையன்ஸ்
MET-ல் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலையில் Tsuzuki ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குத்
தேவையான steering knuckle உயர் தரத்தில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஜப்பான்
ஜப்பான்
இன்டஸ்ட்ரியல் டவுன்ஷிப் வளர்ச்சிக்குத் தகுதியான இடங்கள் என ஜப்பான் அரசு சுமார்
12 இடத்தைத் தேர்வு செய்தது, இதில் ரிலையன்ஸ் MET-ம் ஒன்று. இதன் வாயிலாக
ரிலையன்ஸ் MET-ல் ஏற்கனவே Panasonic மற்றும் டென்சோ ஆகிய நிறுவனங்கள் தொழிற்சாலை
அமைக்க ஒப்பந்தம் செய்த நிலையில் 3வது ஜப்பான் நிறுவனமான Tsuzuki இணைந்துள்ளது.
2021 முதல்
ரிலையன்ஸ்
MET மற்றும் Tsuzuki மத்தியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், டிசுசூகி
நிறுவனத்தின் தலைவர் Eiichi Oya ஜஜ்ஜர்-ல் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலையில்
உற்பத்தி பணிகள் 2021ஆம் ஆண்டு முதல் துவங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதோடு
இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் steering knuckle இந்திய வர்த்தகத்திற்கு
மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படும் எனத்
தெரிவித்தார்.
10 நிறுவனங்கள்
ரிலையன்ஸ் MET-ல் தற்போது பேனாசோனிக்,
டென்சோ, ரிலையன்ஸ் ரீடைல், ஆல்கார்கோ, பாடி இந்தியா, இன்டோ ஸ்பேஸ், திருப்பதி
மற்றும் ஆம்பர் ஆகிய 10 நிறுவனங்கள் கட்டிடப் பணிகளைத் துவங்கியுள்ளதாக இந்நிறுவனத்தின்
சிஇஓ ஸ்ரீவல்லபா கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும் Tsuzuki உடனான ஒப்பந்தம்
இந்தியா - ஜப்பான் இடையேயான வர்த்தக நடப் மேம்படும் எனத் தெரிவித்தார்.
5000 ஊழியர்கள்
ரிலையன்ஸ் MET-ல் தற்போது ஜப்பான்,
கொரியா, பிரான்ஸ் எனப் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 170 நிறுவனங்கள் தொழிற்சாலை
அமைக்கவும், அலுவலகம் அமைக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது ரிலையன்ஸ் MET
கட்டுமான பணிகளில் சுமார் 5,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
புதிய
வேலைவாய்ப்புகள்
ரிலையன்ஸ் MET ஹரியானாவின் ஜஜ்ஜர்
பகுதியில் அமைந்துள்ளது, இப்பகுதியில் அதிகப்படியான புதிய நிறுவனங்கள் தொழிற்சாலை
அமைக்கும் காரணத்தால் இப்பகுதி மக்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்க
வாய்ப்பு உள்ளது இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு வருடமும் புதிதாக 5000 புதிய
வேலைவாய்ப்புகள் உருவாகும் அளவிற்கு ரிலையன்ஸ் MET திறன் படைத்துள்ளதாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக