Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஜூலை, 2020

வேகம் எடுக்கும் அரசு, ஊழியர்களுக்கு ஒருநாள்தான் ரெஸ்ட்!

வேகம் எடுக்கும் அரசு, ஊழியர்களுக்கு இனி ஒருநாள்தான் ரெஸ்ட்!

அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு ஒன்றை முதன்மைச் செயலர் பிறபித்துள்ளார்...


தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி காலை 10: 30 மணிக்கெல்லாம் ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் 6 நாட்கள் பணிக்கு வரவேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் மாதம் முதல் அரசுப் பணிகள் உள்பட பெரும்பாலான பணிகள் முடங்கி போகின. கடந்த 4 மாதங்களாக கொரோனாவோடு போராடி வந்த உலக நாடுகள், தொற்றோடு வாழப் பழகி வருகின்றன.

தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். மனித உடல் ரீதியான இடைவெளி, பாதுகாப்புக் கவசங்கள் உள்ளிட்டவற்றை உறுதி செய்து அரசும் தனியாரும் இயங்க பணிகள் தொடங்கிவிட்டன.

கொரோனா காலத்தில் மாநிலத்தில் அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டதால், கோப்புகள் அனைத்தும் தேங்கிவிட்டன. பெரும்பாலான துறைகளில் அரசு இயக்கமே தடைப்பட்டுள்ளது. இதையடுத்து அரசின் முதன்மைச் செயலர் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கத் தொடங்கும்.

தேங்கி நிற்கும் கோப்புகள் சார்ந்து விரைந்து பணியாற்ற ஊழியர்கள் யாரும் விடுப்பு எடுக்காமல், சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து வேலையைத் தொடங்க வேண்டும்.
 
samayam tamil
அரசு உத்தரவு
ஊழியர்களின் வருகை குறித்து எனக்குக் காலை 10: 30 மணிக்கு முன்னதாக தகவல் அளிக்க வேண்டும். குறிப்பாக அரசு ஊழியர்கள் 6 நாட்கள் பணிக்கு வர வேண்டும். இது தொடர்பாக அரசுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக