மக்கள் தொகை மற்றும் பொருளாதாரத்ததில்
வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா சீனா இடையிலான பதற்றமானது, நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த
இந்த தாக்குதலானது, கடந்த 45 ஆண்டுகளில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே மிக மோசமான
தாக்குதலாக இது அமைந்துள்ளது என்பதால் இது பெரிதும் கவனம் பெற்றுள்ள ஒரு விஷயமாக
அமைந்துள்ளது.
ஆக தற்போதுள்ள பிரச்சனையைத் தீர்க்க
அரசு ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியாவும் சீனாவும் நெருங்கிய
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி
வருகின்றது.
சீன செயலிகளுக்கு தடை
இந்த நிலையில் தான் உலகின் இரண்டாவது
மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து
வருகின்றன. எனினும் கடந்த வாரத்தில் இந்தியா சீனா மோதலுக்கு பின்பு இந்தியா
சீனாவின் 59 செயலிகளையும் தடை செய்தது. அதோடு இந்த மோதலுக்கு பின்பே ஏற்கனவே
சீனாவின் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய
விருப்பம்
இதன் காரணமாக இனி சீன நிறுவனங்கள்
இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமெனில், இந்திய அரசிடம் அனுமதி பெற்று தான்
முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் தான் தற்போது சுமார்
40 - 50 சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. தற்போது
இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், அரசு என்ன முடிவு
செய்யப் போகிறதோ தெரியவில்லை.
மத்திய அரசு ஆய்வு
இது குறித்து வெளியான இடி செய்தியில்,
சீன நிறுவனங்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக
கூறப்படுகிறது. சீனா வேண்டாம், சீன பொருட்கள் வேண்டாம் என்ற பரப்புரைகள் பரவலாக
பேசப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சீன நிறுவனங்கள்
முன்வந்துள்ளன என்று
இதுகுறித்து அறிந்த மூன்று அதிகாரிகள்
தரப்பில் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புதிய விதிமுறைகள்
கடந்த ஏப்ரல் மாதத்தில் தான்
சீனாவுக்கான முதலீட்டு விதிமுறைகள் மாற்றப்பட்டன. அதன் படி அண்டை நாட்டு
நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் என்றால், அதற்கு மத்திய அரசின்
ஒப்புதல் அவசியமாகும். அதோடு புதிய அல்லது கூடுதல் நிதி முதலீடுகளுக்கும், இந்த
விதிமுறைகள் பொருந்தும் என்றும் அப்போது கூறப்பட்டது.
தீவிர ஆலோசனை
இந்நிலையில் தான், இந்தியாவில்
முதலீடு செய்ய, 40- 50 சீன நிறுவனங்கள் முதலீட்டு பரிந்துரைகளை முன் வைத்துள்ளன.
எனினும், இந்திய - சீனா இடையிலான பிரச்னையால், இந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன.
அவற்றை பரிசீலிப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அரசு ஊக்குவிக்குமா?
தற்போதைய நிலையில் இந்திய
நிறுவனங்களுக்கு முதலீடு அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில், அரசு மேற்கொண்டு
முதலீடுகளை ஊக்குவிக்குமா? அல்லது இத்தோடு நிறுத்திக் கொள்ளுமா? பொறுத்திருந்தான்
பார்க்க வேண்டும்.
இதே இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய
முடியாத நிலையில், அன்னிய முதலீடுகளை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக