இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும்
ஈகாமர்ஸ் துறைக்கான கொள்கைகளை வரைமுறைப்படுத்த மத்திய அரசு 2 வருடமாகப் பணியாற்றி
வரும் நிலையில், தற்போது கொள்ளை அறிக்கை வெளியாக உள்ளது.
மத்திய அரசு தற்போது உருவாக்கியுள்ள
ஈகாமர்ஸ் துறைக்கான கொள்கையில் ஈகாமர்ஸ் நிறுவனங்களின் வாயிலாக உள்ளூர்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலும், ஈகாமர்ஸ் நிறுவனங்களின் தரவுகளை
எப்படிக் கையாளப்போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் இந்திய சந்தையில் அமெரிக்க
டெக் நிறுவனங்களான அமேசான், கூகிள், பேஸ்புக் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக்
குறைக்கும் பணியில் இந்தக் கொள்கை முக்கிய பங்காற்ற உள்ளது.
கட்டுப்பாட்டு ஆணையம்
ஈகாமர்ஸ் துறைக்கான கொள்கையை வர்த்தக
அமைச்சகத்தின் தொழிற்துறை மற்றும் உள்வர்த்தக ஊக்குவிப்புத் துறை
உருவாக்கியுள்ளது. தற்போது உருவாக்கியுள்ள கொள்ளை அறிக்கை 15 பக்கம் கொண்டுள்ளது
என்றும், ஈகாமர்ஸ் துறையைக் கண்காணிக்கவும், தரவுகளை மிகப்பெரிய அளவில்
பயன்படுத்தி ஆய்வு செய்யும் உரிமையுடன் ஒரு கட்டுப்பாட்டு ஆணையத்தை உருவாக்க
உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் தற்போது உருவாக்கியுள்ள
கொள்கையின் படி புதிதாக உருவாக்கப்பட உள்ள அரசு கட்டுப்பாட்டு ஆணையம் ஆன்லைன்
நிறுவனத்தின் source codes மற்றும் algorithms ஆகியவற்றை ஆய்வு செய்ய அனுமதி
கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களுக்கும்,
வர்த்தகத்திற்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படுத்தாத ஒரு செயற்கை நுண்ணறிவு தான்
பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யப் பயன்படும் என வர்த்தக அமைச்சகம்
தெரிவித்துள்ளது
டிஜிட்டல் பொருளாதாரம்
இந்தியாவில் தற்போது 500
மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அதுமட்டும்
அல்லாமல் இதன் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பணப்
பரிவர்த்தனை, ஷாப்பிங் முதல் பொழுதுபோக்கு வரையில் அனைத்தும் தற்போது டிஜிட்டல்
சேவையாக மாறி வருகிறது.
தரவு சேமிப்பு
சீன ஆப்-களின் தடைக்குப் பின்பு
இந்தியாவில் வர்த்தகம் செய்யும் அனைத்து ஆன்லைன் நிறுவனங்களும் தரவுகளை
இந்தியாவில் சேமிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மத்திய
அரசு அனைத்து நிறுவனங்களிடம், உரிமையாளர்களிடம் நிறுவன தரவுகளை இந்தியாவில்
உடனடியாக mirroring அல்லது localization செய்ய வேண்டும் என இந்தக் கொள்கையில்
முக்கிய அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
72 மணிநேரம்
அதிலும் குறிப்பாக இந்தியாவில்
வர்த்தகம் செய்யும் அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனம் அடுத்த 72 மணிநேரத்தில் தரவுகள்
அனைத்தும் இந்திய அரசுக்குக் கிடைக்கும் வகையில் தரவுகளை இந்தியாவிற்கு மாற்ற
வேண்டும் என அறிவித்துள்ளது. இந்தத் தரவுகளில் தேசிய பாதுகாப்பு, வரி மற்றும் சட்ட
ஒழுங்கு காப்பதற்காகச் செய்யப்படுகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள்
விற்பனையாளர்கள் தகவல்கள் (மொபைல் நம்பர், வாடிக்கையாளர்கள் புகார் மற்றும்
அவர்களின் மொபைல் எண், ஈமெயில் மற்றும் விலாசம்), இறக்குமதி செய்யப்பட்ட
பொருட்களின் விபரம், பொருட்களின் தயாரிக்கப்பட்ட இடம் என அனைத்தையும் சமர்பிக்க
வேண்டும் என இந்தக் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு நிறுவனங்கள்
மேலும் இந்தியாவில் live streaming
சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர் செலுத்தும் பணத்தைப் பேமெண்ட் டோக்கன் வாயிலாகத்
தான் செலுத்த வேண்டும் என்றும் அதை அரசின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும்
இருக்கும் பேமெண்ட் தளத்தில் தான் செய்ய வேண்டும் என இந்தக் கொள்கை அறிக்கை
தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக