Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜூலை, 2020

இன்சூரன்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியது பேடிஎம்.. விஜய் சேகர் ஷ்ரமா அதிரடி திட்டம்..!


568 கோடி ரூபாய் டீல்
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனமான பேடிஎம் தனது வர்த்தகத்தை இன்சூரன்ஸ் பிரிவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு இப்பிரிவில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தை வைத்திருக்கும் Raheja QBE நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளார் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் ஷர்மா.
Raheja QBE நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் இனி பேடிஎம் நிறுவனத்தின் பல லட்ச வாடிக்கையாளர்களுக்குப் பொதுக் காப்பீடு சேவைகளையும் இனி பேடிஎம் கொடுக்க முடியும். இது பேடிஎம் நிறுவனத்தின் நிதியியல் வர்த்தகப் பிரிவுக்கு மிகப்பெரிய வலிமையைச் சேர்க்கும்.
568 கோடி ரூபாய் டீல்
Raheja QBE நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளைப் பிரிசம் ஜான்சன் நிறுவனமும், 49 சதவீத பங்குகளை QBE ஆஸ்திரேலியா நிறுவனமும் வைத்துள்ளது.
இந்நிலையில் பிரிசம் ஜான்சன் வைத்திருக்கும் 51 சதவீத பங்குகளைப் பேடிஎம் தலைவர் விஜய் சேகர் ஷ்ரமா முதலீட்டில் இயங்கும் ஹெல்த் ஸ்டார்ட்அப் நிறுவனமான QorQL பிரைவேட் நிறுவனம் சுமார் 289 கோடி ரூபாய்க்கு வாங்குகிறது. இதேபோல் QBE ஆஸ்திரேலியா வைத்திருக்கும் 49 சதவீத பங்குகளைப் பேடிஎம் நிறுவனம் கைப்பற்ற உள்ளது.
இப்படி மொத்தம் 568 கோடி ரூபாய்க்கு Raheja QBE நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றிப் பேடிஎம் தலைவர் விஜய் சேகர் சர்மா தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளார்.
ஒப்புதல்
Raheja QBE நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டம் இரு தரப்பு மத்தியிலும் ஒப்புதல் பெற்ற நிலையில், இதற்கான ஒப்பந்தம் செய்ய இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையமான IRDAI அமைப்பின் ஒப்புதலுக்காகப் பேடிஎம் காத்துக்கொண்டு இருக்கிறது.
பேடிஎம்
Raheja QBE நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் பேடிஎம் ஒரு முழு நிதியியல் சேவை தளமாக மாறுவதற்கு மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்துள்ளது. 2014ல் டிஜிட்டல் வேலெட் அறிமுகம் செய்தது, 2017இல் டிஜிட்டல் தங்க விற்பனை, பேமெண்ட்ஸ் வங்கி, 2018ல் முதலீட்டு ஆலோசனை அமைப்பு, பேடிஎம் மனி. 2020 மார்ச் மாதம் பேடிஎம் இன்சூரன்ஸ் ப்ரோகிங் நிறுவனம் இந்தியாவில் இன்சூரன்ஸ் விற்பனை செய்ய IRDAI அமைப்பிடம் இருந்து உரிமம் பெற்ற நிலையில் தற்போது Raheja QBE ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
Raheja QBE
மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் Raheja QBE ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சுமார் 189.46 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது. இந்நிறுவனம் தற்போது அதிகளவிலான வர்த்தகத்தை மோட்டார், பொறுப்பு காப்பீடு பிரிவில் தான் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
வர்த்தகம்
தற்போது பேடிஎம் மற்றும் விஜய் சேகர் ஷர்மா Raheja QBE நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் இனி பேடிஎம் இன்சூரன்ஸ் மற்றும் 3ஆம் தரப்பு நிறுவனத்தின் மூலம் ஆன்லைன் சந்தையில் மிகவும் குறைந்த விலையில் அதிகளவிலான இன்சூரன்ஸ் திட்டத்தை விற்பனை செய்து புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக