Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஜூலை, 2020

கொரோனா உருவாக்கிய வேலைவாய்ப்பு: ஓட்டுநர், மருத்துவ உதவியாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், அதனால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் தமிழ்நாட்டில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதராங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டதைவிட வேலையிழப்பால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ, கார் ஓட்டுநர்கள், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பலரும் நான்கு மாதங்களாக வருவாய் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.


இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மருத்துவத் துறையில் மட்டும் தொடர்ந்து பணி வாய்ப்புகள் உருவாகிவருகின்றன. அண்மையில் செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது 108 ஆம்புலன்ஸ், ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


ஓட்டுநராக விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் மற்றும், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஒரு ஆண்டு ஆகியிருக்க வேண்டும். 24 முதல் 34 வயதானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்த 19 முதல் 30 வயதினர் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தொலைபேசி வாயிலாக தேர்வுகள் நடைபெறும்.
ஓட்டுநர் பணிக்கு 93840 10215, 73977 24763, என்ற எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.


மருத்துவ உதவியாளர் பணிக்கு 73977 24807, 73977 24809, 73977 24812, 73977 24810, 87544 35247 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணிகள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை 13 வரை இந்த எண்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக