Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 2 ஜூலை, 2020

சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்

அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். 

கழுதைப் புலியோ, நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? பாதிப்பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி. 

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலை எடுத்துக் கொண்டு சிங்கத்தைப் பார்க்கச் சென்றது. சிங்கம்! உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. 

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து, தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம். 

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி.

மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி. 

நீதி :

நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட, அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!