முனையடுவார் நாயனார்...!!
பசுமை வளம் சூழ்ந்த சோழ வள நாட்டில் திருநீடூரில் வாழ்ந்து வந்த பல குடி மக்கள் வாழ்ந்த இடத்தில் வேளாள குலத்தில் பிறந்தவர்தான் முனையடுவார். இவர் சிறுவயது முதலே வீரம், விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் என்னமோ இவர் போர்க்கலைகளில் சிறந்து விளங்கினார்.
போர்க்கலைகளில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் இறைவனிடத்தில் கொண்ட அன்பிலும், பக்தியிலும் சிறந்து விளங்கினார். சிறுவயது முதலே போர்க்கலைகளில் வளர்ச்சி பெறுவது போல எம்பெருமானிடத்தில் கொண்ட பக்தியும் வளர்ச்சி அடைந்தது. எம்பெருமானை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் அவரை வழிபடும் அடியார்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றும் விருப்பமும் கொண்டிருந்தார்.
அதற்கான செயல்களை செயல்படுத்துவதற்கு தேவையான பொருட்களை தம்முடைய வீரத்தை கொண்டு நேர்மையான முறையில் பொருள் ஈட்டி அடியார்களின் விருப்பங்களை நிறைவேற்ற துவங்கினார். அதாவது மனதில் வீரமும், எந்த நிலையிலும் அச்சம் கொள்ளாமல் போர்புரியும் வீரர்களை கொண்டு ஒரு சிறு படையை உருவாக்கினார். போர்க்காலத்தில் தங்களை நாடி வரும் மன்னர்களிடம் நடுவுநிலையில் நின்று அவர்களுக்கு தேவையான உதவிகளையும், போர்க்களத்தில் அவர்களுடன் இணைந்து போர்புரிந்து எதிரி நாடுகளை வெற்றி பெற இவருடைய சிறு படையானது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இம்முறையானது அன்றைய காலத்து மன்னர்களால் பெரும் அளவில் ஊக்குவிக்கப்பட்டதாகும். இதையே தம்முடைய தொழிலாக கொண்டு தம்முடைய வீரத்திற்கு கிடைக்கும் பொருட்செல்வதை கொண்டு எம்பெருமானின் திருத்தலத்திற்கு தேவையான பணிகளையும், அவருடைய அடியார்களின் விருப்பங்களையும் நிறைவேற்றி வந்தார்.
முனையடுவார் நெடுங்காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்து ஈசனடியார்களுக்காக தமக்கு கிடைக்கும் பொருட்செல்வத்தை கொண்டு திருப்பணிகள் பல புரிந்திருந்து உமையொருபாகரின் திருவருளால் சிவலோக பதவி அடைந்து பெருவாழ்வு பெற்றார்.
சிவபுராணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக