வியாழன், 2 ஜூலை, 2020

3-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

சனி என்ற வார்த்தையைக் கேட்டாலே எல்லோருக்கும் ஒரு பயம். அந்த அளவிற்கு நாம் சனிபகவானை பார்த்து பயந்திருக்கிறோம். ஆனால், உண்மையில் சனிபகவான் இந்த அளவு பயமுறுத்தக்கூடியவரா? என்று பார்த்தால், நிச்சயமாக கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

கோவில்களில் சனீஸ்வரனுக்கு கருமை நிற ஆடையும், கரிய எள்ளை முடிந்த கரிய துணியை திரியாக கொண்ட விளக்குகளும் கொடுக்கப்படுகின்றன.

இவற்றோடு சனீஸ்வரனின் வாகனமாக கருதப்படும் காகமும் கருமை நிறமுடையதாகும். இவ்வாறு பல்வேறு பட்ட குறியீடுகள் கருமை நிறம் கொண்டவையாக உள்ளன. இவை இருள் சூழ்ந்த பாதாள உலகத்தினைக் குறிப்பதாகவும் கருத இடமுண்டு.

3ல் சனி இருந்தால் என்ன பலன்?

👉 துணிச்சல் உடையவர்கள். 

👉 புத்திசாலித்தனமான செயல்களை உடையவர்கள். 

👉 சாதனைகளை படைக்க வல்லவர்கள். 

👉 பொருள் வளம் உடையவராக இருக்கக்கூடியவர்கள்.

👉 இவர்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்வது கடினமாகும்.

👉 உடன் பிறப்புகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

👉 அனைவருக்கும் உதவும் குணம் உடையவர்கள்.

👉 வாழ்க்கைத்துணைவரின் மூலம் நன்மை உண்டாகும்.

👉 பொதுப்பணிகளின் மூலம் மேன்மை உண்டாகும்.

👉 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

👉 முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

👉 தன்னுடைய காரியத்தில் கண்ணும், கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்