Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 1 ஜூலை, 2020

மத்திய அரசின் தடையில் இருந்து பப்ஜி தப்பியது எப்படி?


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கசப்புத்தன்மை அதிகரித்துள்ள நிலையில், டிக் டாக், ஹெலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஜூன் 29ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் இந்த ஆப்கள் அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பாரபட்சமில்லாத, நியாயமான தொழில் சூழலை ஏற்படுத்த வேண்டுமென இந்தியாவை சீன தரப்பு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், பிரபல வீடியோ கேம் விளையாட்டான பப்ஜிக்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பப்ஜி உலகளவில் பிரபலமான விளையாட்டு மட்டுமல்லாமல் இந்தியாவில் பல லட்சம் பயனர்களைக் கொண்டது. பலரும் பப்ஜி சீனாவில் உருவாக்கப்பட்ட விளையாட்டு என நம்புகின்றனர். ஆனால் உண்மையிலேயே பப்ஜி சீனாவை சேர்ந்தது அல்ல. தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் நிறுவனமான ப்ளுஹோல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது பப்ஜி.

பப்ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏராளமான பயனர்களை ஈர்த்ததால் சீனாவை சேர்ந்த மாபெரும் ஜாம்பவானான டென்செண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பப்ஜியின் விநியோகராக இணைந்துகொண்டது. பப்ஜி சீன சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தியதை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தியது டென்செண்ட். இந்தியாவில் பல லட்சம் பயனர்களை ஈர்த்து பப்ஜியின் தொழில் சூடுபிடித்தது.

பப்ஜியை சந்தைப்படுத்தியதில் சீன நிறுவனமான டென்செண்டுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ஆனாலும், பப்ஜியின் உரிமைதாரராக ப்ளுஹோல் இருப்பதாலும், தென் கொரியாவுடன் இந்தியா நல்லுறவு காத்து வருவதாலும் மத்திய அரசின் தடையில் இருந்து பப்ஜி தப்பித்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக