தமிழகத்தில் இறப்பு விகிதம் அதிகரித்து வருவது மக்கள்
மத்தியில் கொரோனா குறித்த பீதியை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில்
3,756 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த
நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக
உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3,756 பேர்களில் 1,261 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்
என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72,500 ஆக
உயர்ந்துள்ளது.
அதோடு
தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 64 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி
எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் நாளுக்குநாள்
கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இதுநாள்
வரை ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் மரணம் அடைந்து வந்த
நிலையில் கடந்த சில நாட்களாக எந்த பாதிப்பு இல்லாதவர்களும் மரணித்து வருவது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக