மாணவர்களுக்கான விசா மறுப்பு
சர்ச்சையில் அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது MIT மற்றும் ஹார்வர்ட்
ஆகிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம்
முழுவதிலும் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அமெரிக்கவிலும் பல
லட்சக்கணக்கான மக்கள் இதற்கு இரையாகி வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு
மாணவர்களின் விசாக்களை அகற்றுவது தொடர்பாக பல சர்ச்சைகள் அமெரிக்கவில் எழுந்து
வருகின்றது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களை
மீண்டும் திறக்கும்படியும், பிற நலன் கருதிய எச்சரிப்புகளை மீறியும்
அன்மையில் அமெரிக்க அதிபர் எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியிட்ட உத்தரவு
பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என ஹார்வர்ட்டின் தலைவர் லாரன்ஸ் எஸ். பேக்கோ
கூறியுள்ளார்.
இத்துடன், எம்.ஐ.டி நிர்வாகமும்
ஹார்வர்டும் இணைந்து தற்பொழுது டொனால்டு டிரம்புக்கு எதிராக மாணவர்களின் விசா
தொடர்பான சர்ச்சையாக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக