சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான
ரெட்மி தனது புதிய ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடலை சீனாவில் அறிமுகம்
செய்துள்ளது,குறிப்பாக இந்த சாதனம் விரைவில் அனைத்து சந்தைளிலும் விற்பனைக்கு
வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் முழு
விவரங்களைப் பார்ப்போம்.
ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் ஆனது
16.1-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 90-சதவீதம்
ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் டெல் லேப்டாப் அளவிற்கு சரியான தொழில்நுட்ப
வசதியை கொண்டுள்ளது.
ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் 10-வது
ஜென் இன்டெல் கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது. மேலும் இன்டெல் ஐரிஸ்
பிளஸ் கிராபிக்ஸ் மற்றும் 2 ஜிபி டிடிஆர் 5 என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 350
ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.
இந்த புதிய லேப்டாப் மாடல் 16ஜிபி வரை டிடிஆர் 4 3200 மெகா
ஹெர்ட்ஸ் ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது,மேலும் இந்த
சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடலில் 46Wh
பேட்டரி ஆதரவு உள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 65W USB-Cவேகமான
சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது இந்த புதிய லேப்டாப் மாடல். எனவே ரெட்மிபுக்
16 லேப்டாப் மாடல் ஆனது 30நிமிடங்களில் 50சதவிகிதம் சார்ஜ் ஆகும் தன்மையை
கொண்டுள்ளதாக சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாதனம் 12மணி நேரம் வீடியோ பிளேபேக்கையும்,9
மணிநேர ஆன்லைன் வீடியோ பிளேபேக்கையும் ஆதரிக்கும் எனவும்அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் சாம்பல் நிறத்தில்
மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைஃபை 802.11, புளூடூத் 5.1, யுஎஸ்பி 3.1 ஜென்1 போர்ட்,
யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு
இணைப்பு ஆதரவுகளை கொண்டுளள்து இந்த சாதனம். மேலும் இரண்டு 2W ஸ்பீக்கர்களைக்
கொண்டுள்ளது மற்றும் டிடிஎஸ் ஆடியோவை ஆதரிக்கிறது ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல்.
அட்டகாசமான விலை
இந்திய மதிப்பில்...
இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்ட
ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடலின் விலை ரூ.53,440-ஆக உள்ளது.
இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் கொண்ட
ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடலின் விலை ரூ.60,920-ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக