உங்களை பிரம்மிப்பூட்டும் மற்றும்
அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு பனிக்குழந்தையே இமயமலை.ஆண்டுதோறும் வளரும் இமயம், 5 நாடுகளின்
பாதுகாவலனாக திகழ்கிறது. அறிவியலையே ஆர்வம்கொள்ள வைக்கும் பல அற்புதங்களை தன்னுள் புதைத்து
வைத்துள்ளது.இத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய இமயமலை,பல மர்மங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இமயம்
எப்போதுமே ஒரு வியப்பு தான். தன்னுள் பல ஆச்சரியங்களை அடக்கி வைத்து வானுயர்ந்த
நிற்கிறது இமயமலை. ஆன்மிகம், புவியியல், அட்வென்சர், சுற்றுலா என பலதரப்பட்ட
மக்களையும் தன்பால் ஈர்த்திருப்பது இமயமலையின் தனிச்சிறப்பு என்று கூறலாம்.
சூப்பர்ஸ்டாரில் இருந்து சாமானிய மனிதர் வரை பலரை
கண்டிருக்கும் இமயமலையில் இருக்கும் ஐந்து மர்மமான இடங்களை குறித்து தான் இந்த
கட்டுரையில் நாம் அறிந்துக்கொள்ளவிருக்கிறோம்.
குருடோங்மர் ஏரி
டீஸ்டா நதியின் மூலமாக விளங்கும் இந்த
ஏரி,கஞ்சன்சுங்கா மலைத்தொடரில் ஒரு பீடபூமியில் அமைந்துள்ளது.நீங்கள் இப்போது இந்த
ஏரிக்கு சென்றாலும் அல்லது கடுமையான குளிர்காலத்தில் சென்றாலும் கூட ஏரியில்
உறைந்து போகாத ஒரு சிறிய இடத்தைக் காண்பீர்கள்.
அதன் மர்மத்தை பொறுத்த வரையில்,
புகழ்பெற்ற பௌத்த குரு பத்மசம்பவா அவர்கள் ஏரியில் அந்த இடத்தை தொட்டு, மக்கள்
பயன்பெற அந்த நீர் உரையாமலிருக்க ஆசீர்வதித்தார் என்று இன்றளவும் அங்கு வாழும்
மக்களால் நம்பப்படுகிறது.
உங்களால் நம்ப முடிகிறதோ இல்லையோ, மிகக் கடுமையான
குளிர்காலத்தில் கூட சுற்றுலா வாசிகளும், உள்ளூர் மக்களும் அந்த ஏரியில்
உரையாமலிருக்கும் அந்த சிறிய பகுதியை கண்டு வியக்கிறார்கள்.
ரூப்குண்ட் ஏரி
ரூப்குண்ட் உத்தரகண்ட் மாநிலத்தில்
மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் அழகான மலைப்பிரதேசத்தில் ஒன்றாகும். இதற்கு
பிரம்மிக்கக்கூடிய வகையில் பல சிறப்புகள் இருந்தாலும் ,ஒரு பரபரப்பான மர்மம்,
சுற்றுலாவாசிகளை இங்கு வர ஆர்வத்தை தூண்டுகிறது.
இதன் மர்மம்,ஏரியின் அருகில் உள்ள
பாறைகளில் சிதறிக் கிடக்கும் மனித மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள் மற்றும்
எலும்புகள். இங்கு மலையேறும் மனிதர்களின் பல புகைப்படங்கள் மற்றும்
பார்வையாளர்களின் கணக்குகளில் பகிரப்பட்ட புகைப்படங்களே ஆதாரமாக விளங்குகிறது.
இந்த எலும்புக்கூடுகள் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற படையினர் மலையேற்றத்தின்
போது பெரிய ஆலங்கட்டி மழையால் தாக்கப்பட்டனர் என்று ஒரு கோட்பாடு கூறுகிறது.
மற்றொரு கோட்பாடு இவை ஒரு ராஜ
குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கூறுகின்றன, இந்த வழியில் இறப்பதற்கு அவர்கள் ஒரு
தெய்வத்தால் சபிக்கப்பட்டனர் என்றும் கூறுகின்றன.எதுவாயினும், இவை அனைத்தும்
செவிவழிக் கதைகளாகவே உள்ளது. இதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் உறுதியாக கூற
மாட்டோம்.ஏனெனில் ரூப்குண்ட் ஏரி இன்றளவும் மர்மத்தின் புகலிடமாகவே விளங்குகிறது.
பாரோ தக்சங் அல்லது புலியின் கூடு
பூட்டானின் ஒவ்வொரு பயணத்திலும்
இன்றியமையாத, செங்குத்தான மலை முகட்டிலுள்ள இந்த பெளத்த மடாலயம் பற்றி கூற ஒரு கதை
உள்ளது. இந்த மடத்தின் மையத்தில், ஒரு குகை உள்ளது.
இங்கு குரு பத்மசம்பவா மூன்று
ஆண்டுகள், மூன்று மாதங்கள், மூன்று வாரங்கள், மூன்று நாட்கள் மற்றும் மூன்று மணி
நேரம் தியானித்தார். இங்குள்ள மர்மம் அது அமைந்திருக்கும் இடமே ஆகும். மிகக்
கடினமான இந்த மலையேற்றத்திற்கு குரு பத்மசம்பவா திபெத்திலிருந்து ஒரு புலியின்
மீது பறந்து இந்த இடத்தை அடைந்தார் என்பதால் இவ்விடம் புலியின் கூடு என்று
அழைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
மேற்கண்ட படத்தில் அந்த ஆபத்தான
இருப்பிடத்தைப் கண்டால் நம்பிக்கையும் உண்மையாகத் தோன்றலாம். இந்த மடாலயம்,1692
ஆம் ஆண்டில் தியான மண்டபமாக கட்டப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இது ஒரு அறிய
சாதனையாகும்.
கங்கர் புயென்ஸம்
ஞாங்கஞ்ச்
குறிப்பாக திபெத் மற்றும் இந்தியாவை சேர்ந்த பௌத்தர்கள், ஞாங்கஞ்ச் ஒரு இடம் மட்டுமல்ல, உயர்ந்த பரிமாணமும் என்று கருதுகின்றனர். முனிவர்கள், யோகிகள் மற்றும் பிற தகுதியான ஆத்மாக்களால் மட்டுமே ஞாங்கஞ்சைக் கண்டுபிடித்து அடைய முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இங்கு தங்க விரும்புவோர் அழியாமையைப் பெறுவார்கள்! என்று நாட்டுப்புறக் கதைகளில் கூறப்பட்டுள்ளது, ஆனால் சில புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர்கள் இதைப் பார்வையிடுவதாகக் கூறி, இவ்விடத்தை மேலும் பிரபலமடையச் செய்தனர்.
நீங்களும் இமயமலையையும் இந்த மலைகளைச் சுற்றியுள்ள மர்மங்களையும் என்றென்றும் காதலிக்கிறீர்கள் என்றால், அதைப் பற்றி கீழேயுள்ள கருத்துப் பிரிவில் சொல்ல மறக்காதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக