திருச்சியில் தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க சொல்லி பணம் கொடுத்து மிரட்டியதாக அவரது பெற்றோர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கவரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமியை அவரது அத்தை மகன் ராம்கி (22) என்ற வாலிபர் திருமணம் செய்துகொள்வதாக கூறி பழகி கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில், தான் 6 மாதம் கர்ப்பம் அடைந்ததை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் சிறுமியை கடிந்துகொண்ட பெற்றோர் பின்னர் ராம்கிக்கே மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த ராம்கியின் பெற்றோர் சிறுமியை தரைகுறைவாக பேசியதோடு அவரது பெற்றோரையும் அவதூறாக திட்டி அனுப்பியுள்ளனர். இதனால் நீதி கேட்டு சிறுமியின் பெற்றோர் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் 6 மாதங்களாக காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யாமல் தட்டி கழித்து வந்துள்ளனர்.
மேலும், கருவை கலைக்கக்கோரி ராம்கியின் பெற்றோர் சிறுமியின் குடும்பத்துக்கு பணம் கொடுத்ததாகவும், அதற்கு மறுத்த அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ராம்கி முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்நிலையில், எப்படியும் தனக்கு நீதி கிடைக்காது என்ற விரக்தியில் இருந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
மகளின் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டு, அவர் தற்கொலை செய்யும் அளவுக்கு சூழ்நிலையை ஏற்படுத்திய ராம்கிக்கும், அவரது குடும்பத்துக்கும் கடும் தண்டனை வழங்கக்கோரி நிர்கதியாக நிற்கிறது சிறுமியின் குடும்பம்
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக