சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் சாய் வால் (Chai Waale) (பிரபலமான டீ கடை) தற்போது தனது முதலீட்டார்கள் மூலம் 1.75 கோடி நிதி திரட்டியுள்ளது. 2 வருடத்தில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது சாய் வால்.!
தருண் தரிவால் (ED of Dhariwal Group), சுனில் குமார் சிங்வி (Managing Partner of South Handlooms), அருண் மற்றும் விஷால் ஓஸ்ட்வால் ( hailing the top management of the DK Group of Companies), 4 ஜி கேபிடல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் குணவந்த் வைட் மற்றும் பாரம்பரிய நகைக்கடை விற்பனையாளர்களான மகாலக்ஷ்மி ஜுவல்லர்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த பாரத்குமார் சோஹன்ராஜ் ஆகியோர் முதலீடு செய்துள்ளனராம்.
இந்த நிதி திரட்டலானது, சாய் வாலாவை இன்னும் மேம்படுத்தி, அதிக இடங்களில் கிளையை விரிவுபடுத்தி அடுத்தகட்டத்திற்கு நகரவே இந்த முதலீடு திறக்கட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு விதூர் மகேஸ்வரி அவர்களால் நிறுவப்பட்ட சாய் வேல் (Chai Waale), துவங்கபட்டதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே மூன்று பெரிய தயாரிப்பு அறைகள் உட்பட 14 கிளைகளாக சாய் வால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக