Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 ஜூலை, 2020

மோட்டோ G9+ விலை இவ்ளோதானா? வெயிட் பண்ணி வாங்கலாம் போலயே!

Moto G9 Plus Launch


மோட்டோ ஜி தொடரின் கீழ் கூடிய விரைவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை இவ்ளோதானா.. இதோ முழு விவரங்கள்...

 மோட்டோரோலா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனை அதன் பிரபலமான மோட்டோ ஜி-சீரிஸின் கீழ் அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அது மோட்டோ ஜி 9 பிளஸ் என பெயரிடப்பட்டு, கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சுவாரசியமான விடயம் என்னவென்றால், மாடல் பெயரை மட்டுமின்றி வரவிருக்கும் மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலையையும் டிப்ஸ்டர் சுதான்ஷு தெரிவித்துள்ளார். டிப்ஸ்டரின் கூற்றுப்படி, மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 277.15 யூரோக்கள் என்கிற விலையை எட்டலாம். அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.23,000 ஆகும்.

இது மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு மாடலின் விலையாக இருக்கலாம். இது தவிர்த்து, இந்த ஸ்மார்ட்போனின் வன்பொருள் விவரங்கள் மற்றும் வடிவமைப்பு பற்றி எந்த தகவலும் இல்லை, எனவே மேலும் விவரங்களுக்கு எங்களுடன் இணைந்திருக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

இதற்கிடையில், மோட்டோரோலா நிறுவனம் மத்திய கிழக்கில் மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி 8 பிளஸின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பதிப்பு என்று கூறப்படுகிறது.

அம்சங்களை பொறுத்தவரை மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஆனது 6.3 இன்ச் ஃபுல் எச்டி + எல்டிபிஎஸ் ஐபிஎஸ் எல்சிடி பேனல், 2280 x 1080 பிக்சல் தீர்மானம், 19: 9 மேக்ஸ் விஷன் திரை விகிதம், வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு, 1.8GHz ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 ப்ராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக சேமிப்பிடத்தை 512 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவு போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

சமீபத்தில் மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது. டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ ஆனது மற்ற லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா சாதனங்களைப் போலவே ஆண்ட்ராய்டு 10 கொன்டு இயங்குகிறது.

இது 6.5 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080x2,340 பிக்சல்கள், 19.5: 9 திரை விகிதம் மற்றும் 395 பிபி பிக்சல் அடர்த்தி) அளவிலான நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.


இது ஸ்னாப்டிராகன் 730G SoC மூலம் இயக்கப்படுகிறது, இது அட்ரினோ 618 ஜி.பீ.யூ மற்றும் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் மெமரியை பொறுத்தவரை 128 ஜிபி கொண்டுள்ளது. மேலும் ஒரு ஹைபிரிட் மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக (1TB வரை) மெமரி நீட்டிப்பிற்கான ஆதரவையும் வழங்குகிறது

கேமரத்துறையை பொறுத்தவரை, மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ அதன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

அதில் எஃப் / 1.8 லென்ஸ் கொண்ட 64 மெகாபிக்சல் பிரதான கேமரா + எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் + எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, பாப்-அப் கேமரா க்குள் அமைப்பிற்குள் ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை (எஃப் / 2.2)கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்யப்படுகிறது. நிறுவனத்தின்படி இது இரண்டு நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்கும்.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ ஆனது ப்ளூடூத் வி 5, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் டூயல் 4ஜி வோல்டிஇ ஆகியவைகளை கொண்டுள்ளது.


மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ ஸ்மார்ட்போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது, மேலும் இது பிரத்யேக கூகுள் அசிஸ்டென்ட் பொத்தானையும் கொண்டுள்ளது. அளவீட்டில் இது 162.9x76.9x9.6 மிமீ மற்றும் 210 கிராம் எடையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக