இந்திய
ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி அமைப்பு புதிய எஸ்பிஐ ரூபே கார்டு வசதியை அறிமுகம்
செய்துள்ளது. இந்த எஸ்பிஐ ரூபே கார்டு வசதி ஆனது ஒரு டிஜிட்டல் கிரெடிட் கார்டு
ஆகும். குறிப்பாக ஐஆர்சிடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(எஸ்பிஐ), தேசிய
பரிவர்த்தனை கழகம்(என்பிசிஐ) ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்த அட்டகாசமான
டிஜிட்டல் கார்டை அறிமுகம் செய்துள்ளன.
மேலும்
டிஜிட்டல் இந்தியா, ஆத்மநிர்பார் பாரத், மேக் இன் இந்திய போன்ற மத்திய அரசு
திட்டங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இந்த புதிய டிஜிட்டல் கார்டு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் என்எப்சி ஆதரவு உள்ளது.
குறிப்பாக
இந்த ஐஆர்சிடிசி எஸ்பிஐ ரூபே கார்டை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சலுகைகள்
வழங்கப்படுகின்றன. அவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை முழுமையாகப் பார்ப்போம்.
ஐஆர்சிடிசி
வலைதளம் மூலமாக பதிவு செய்யப்படும் ஏசி1, ஏசி2, ஏசி3, ஏசி சிசி ரயில்
டிக்கெட்டுகளின் மதிப்பில் 10விழுக்காடு வரை கேஷ்பேக் வழங்கப்படும்.
குறிப்பாக
ஐஆர்சிடிசி மூலம் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு பரிவர்த்தனைக் கட்டணத்தில்
1 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும். பின்பு ரூபே கார்டு பயனர்களுக்கு
350ஆக்டிவேஷன் போனஸ் ரிவார்ட் புள்ளிகள் வழங்கப்படும். மேலும் பயணம்,உணவு, சில்லறை
வணிகம் பொழுதுபோக்கு போன்றவற்றில் சலுகைகள் வழங்கப்படும்.
அஜியோ,
பிக் பேஸ்கட்,OXXY, ஃபுட் ஃபார் ட்ராவல் உள்ளிட்ட இ-காமர்ஸ் வலைதளங்களில்
தள்ளுபடிகள் வழங்கப்படும். மேலும் ரிவார்ட் புள்ளிகளை ஐஆர்சிடிசி இணையதளத்தில்
பயன்படுத்தி இலவச ரயில் டிக்கெட்டுகளை பெறலாம்.
அதேபோல்
பெட்ரோல் நிலையங்களில் கார்டை பயன்படுத்தும்போது எரிபொருள் கூடுதல் கட்டணத்தில்
1விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர
ஆன்லைன் ஷாப்பிங், டிஜிட்டல் சேவைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட பல சேவைகளில்
குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்ல்டன்இ
விஐபிஇ ஸ்கைபேக்இ அரிஸ்டோகிராட்இ கேப்ரீஸ் ஆகிய நிறுவனங்களில் பொருட்களை
வாங்கும்போது 10 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக