உலகில் கொடூரமான முறையில் தொடர் கொலைகள் புரிந்து வந்த பயங்கரமான பெண்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
உலகில் நன்மை தீமைகள் வரையறுக்கபடும்
போது அதில் அனேக தீமைகளை விளைவிப்பது எப்பொழுதும் ஆண்களே என்று நாம் நினைப்போம். ஆனால்
தொடர் கொலையாளிகளும் பலரின் வாழ்க்கையில் சோகத்தை விளைவித்த சில பெண்கள் மனித வரலாற்றில்
உள்ளனர். அத்தகைய வரலாற்றின் மோசமான 10 பெண்கள் குறித்த இந்த தொகுப்பில் காணலாம்...
10.குயின்
மேரி (1516-1558)
எட்டாவது
ஹென்றிக்கும் அரோகன் இனத்தை சேர்ந்த கேத்தரினுக்கும் பிறந்த ஒரே மகள் தான்
குயின்மேரி. ஆறாம் எட்வர்டின் மரணத்திற்க்கு பின் லேடி ஜான் கிரே ஒன்பது நாட்களில்
பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் குயின் மேரி இங்கிலாந்தின் மஹாராணியாக
முடிசூட்டப்பட்டார்.
கத்தோலிக்க
மதத்தை விரும்பிய மேரி அம்மதத்தை பரப்புவதில் ஈடுபாடு உடையவராக இருந்தார். இங்கிலாந்து
மக்களை கத்தோலிக்க மதத்திற்கு மாற அவர் வற்புறுத்தினார்.
அதற்கு
எதிராக பலர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதில் முக்கியமான போராட்டக்காரர்களை
ப்ளடி மேரி என்னும் புனை பெயரில் அவரே தூக்கிலிட்டார்.
தூக்கிற்கு
பயந்து 800 க்கும் அதிகமான போராட்டகாரர்கள் நாட்டை விட்டு வெளியேறினர், அவர்களால்
தாங்கள் சாகும் வரை நாடு திரும்பமுடியவில்லை. ராணி மேரியுடன் ஒப்பிடுகையில் ராணி
எலிசபெத் இந்த பட்டியலில் 10 ஆவது இடத்திலேயே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
09.மைரா-ஹிண்ட்லி-எம்.எஸ்.மைரா
(1942-2002)
ஹிண்ட்லியும்
லன் பிராடியும் பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியில் 1960 களின் மத்தியில் மூர்ஸ்
கொலைகள் எனப்படும் படுகொலைகளை நடத்தினர்.
இந்த
இரண்டு அரக்கர்களும் சேர்ந்து 12 வயதிற்க்குட்பட்ட மூன்று குழந்தைகளையும் 16
மற்றும் 17 வயதுடைய இரண்டு இளைஞர்களையும் கடத்தி அவர்களை பாலியல் சித்ரவதை செய்து
கொலை செய்தனர்.
இதையடுத்து
மான்செஸ்டரின் சென்ரல் ஸ்டேசனில் உள்ள உடைமைகளை பராமரிக்கும் இடத்தில் மைராவின்
உடைமைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆடியோ டேப்பில் கொலையுண்டவர்களின் கதறல் பதிவு
செய்யப்பட்டிருந்தது.
அதில்
கொலை செய்யப்பட்டவர்கள் ஹிண்ட்லியும், பிராடியும், தங்களை பாலியல் வன்கொடுமை
செய்து சித்ரவதை செய்வதாக கதறினர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஹிண்ட்லி
சிறை வாசத்தின் இறுதி நாட்களில் திமிர் பிடித்தவளாக நடந்து கொண்டார், பின்
நாட்களில் அதுவே அவரது அடையாளமாகவும் மாறியது. காவல்துறை செயளாலர் சாண்ரா
வில்கின்சன் கூறுகையில் ஹிண்ட்லியும் அவரது தாய் நெல்லியும் நீதிமன்றத்தின் எதிரே
நின்றவாறு இனிப்புகளை சாப்பிட்டு கொண்டிருந்ததாகவும் அதை தன்னால் மறக்க முடியாது
என்றும் கூறுகிறார்.
08.இசபெல்லா என்னும்
கொலையாளி (1451-1504)
கிறிஸ்டோபர்
கோலம்பஸின் ஆதரவாளர் என்று அனைவராலும் அறியப்பட்ட ஸ்பெய்னை சேர்ந்த இரண்டாம்
இசபெல்லா கட்டோலிக்காவும் அவரது கணவர் இரண்டாம் பெர்டினன்டும் இணைந்து தங்கள்
பேரன் முதலாம் கார்லோஸின் ஆட்சியின் கீழ் ஒன்றிணைந்த ஸ்பெயினை உருவாக்க
ஆசைப்பட்டனர்.
இசபெல்லா
தாமஸ் டி டோர்க்மெடா என்பவரை விசாரணை ஆணையத்தின் அதிகாரியாக நியமித்தார். மார்ச்
31, 1492 அன்று அல்ஹம்ப்ரா ஆணை வெளியிடப்பட்டது. அதன்படி ஸ்பெயினில் உள்ள அனைத்து
யூதர்கள் மற்றும் முஸ்லீம்களும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அல்லது மதம்
மாறவேண்டும்.
இந்த
நடவடிக்கையின் காரணமாக சுமார் 2,00,000 பேர் ஸ்பெயினிலிருந்து வெளியேறினர்.
மதமாற்றத்தை தேர்வு செய்த யூதர்கள் ஜடாய்சிங் கன்வர்சோ என்பவரால் விசாரணை என்ற
பெயரில் துன்புறுத்தபட்டனர். 1947 ஆம் ஆண்டு புனித போப் பால் அவர்கள் இசபெல்லாவின்
அடிமைபடுத்தலுக்கான காரணத்தை கூறினார்.
இசபெல்லா
ஸ்பெயினின் புனிததன்மையை மீட்டு நல்வழிபடுத்தியதாக கூறினார். கத்தோலிக்க திருச்சபை
கடவுளின் சேவகன் என்று பெயரிட்டு அவரை பாராட்டியது.
07.பெவர்லி அல்லிட்
(1968-2001)
மரணத்தின்
தேவதை என்ற பெயரால் அழைக்கப்படும் பிரிட்டனின் பிரபலமான தொடர் கொலைகாரியாகிய
பெவர்லி கெயில் அல்லிட் ஒரு குழந்தை செவிலியராக பணியாற்றியவர்.
இவர்
பணியாற்றிய இடங்களில் உள்ள குழந்தைகள் சில மாரடைப்பாலும், மூச்சுதிணறலாலும் இறந்து
போக பரிசோதனையில் செயற்கையாக மாரடைப்பு வந்தது தெரியவந்தது. விசாரணையில் இந்த
கொலைகளை செய்தது பெவர்லி அல்லிட் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பென்சிலின்
மற்றும் பொட்டாசியம் ஊசிகளை பயன்படுத்தி அவர் அந்த குழந்தைகளுக்கு மாரடைப்பை
ஏற்படுத்தியிருக்கிறார் அது இல்லாத பட்சத்தில் மூச்சி திணறலை வரவழைத்திருக்கிறார்.
போலிசில் பிடிபடிமுன் 54 நாட்கள் கால இடைவெளியில் 13 குழந்தைகளை
காயப்படுத்தியிருந்தார்.
13
குழந்தைகள் பாதிக்கபட்ட போதும் 4 குழந்தைகளின் கொலை மற்றும் 5 பேரை பலத்த
காயத்திற்குட்படுத்தியதற்க்காகவும் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றங்களுக்கு
எந்த தனி காரணங்களும் இல்லாத நிலையில் “முன்சாயூசன் சின்ரொம்” என்னும் நோயின்
காரணமாகவே அல்லிட் இந்த குற்றங்களை செய்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
06.பெல்லி கன்னஸ்
(1859-1931)
அமெரிக்காவின்
பிரபலமான பெண் தொடர் கொலையாளிகளில் ஒருவரான பெல்லி கன்னஸ் 6அடி (1.83மீ) 200
பவுண்டு (91கிலோ) எடையும் கொண்டவர்.இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளை வெவ்வேறு
காலகட்டங்களில் கொலை செய்துள்ளார்.
தனது
ஆண் நண்பர்கள் மற்றும் தனது வழக்கறிஞர்களை கூட இவர் விட்டுவைக்கவில்லை. தனது
மகள்களான மார்டில் மற்றும் லூசி ஆகியோரையும் கொன்றுள்ளார்.
கொலைகளுக்கான
காரணங்களை விசாரித்த போது பணத்திற்காகவும், சொத்துக்காகவும், மற்றும் இன்சூரன்ஸ்
பணத்திற்காகவும் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இவர் வழக்கறிஞர்களின்
சொத்துக்களை மோசடி செய்து அவர்களை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பெல்லியால்
இருபதுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அறிக்கை அளிக்கப்பட்டது.
சிலர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம். என்று கூறுகின்றனர்.
பெல்லியின்
உடலை பிரேத பரிசோதனை செய்த போது உயரம் 6அடியில் இருந்து 2அங்குலம் குறைவாக
இருந்தததால் குழப்பம் ஏற்பட்டது.
05.ஆங்கிலேய பெண்
மேரி ஆன் காட்டன் (1832-1873)
பெல்லி
கன்னஸ்க்கும் 30 வருடங்களுக்கு முன்பே மேரி ஆன் காட்டன் என்னும் ஆங்கிலேய பெண்
சீறியல் கொலைகாரியாக வலம் வந்துள்ளார். தனது இருபதாவது வயதில் வில்லியம் மவுப்ரே
என்பவரை திருமணம் செய்து கொண்டு பிளைமவுத் டொவானில் தனது குடும்ப வாழ்க்கையே
துவங்கினார்.
ஆன்
காட்டனுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தது அதில் மூன்று குழந்தைகள் இரைப்பை காய்ச்சல்
மற்றும் வயிற்றுவலியால் இறந்து போக அந்த குடும்பம் அங்கிருந்து வடகிழக்கு நோக்கி
நகர்ந்தனர் அங்கு அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். சில நாட்களிலேயே
மேலும் மூன்று குழந்தைகள் இறந்தனர்.
ஜனவரி
1865களில் வில்லியமும் இரைப்பை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார் அதை தொடர்ந்து
பிரிட்டிஷ் ப்ருடென்ஷியல் நிறுவனம் மேரிக்கு 35 பவுண்டுகள் நஷ்ட ஈடாக வழங்கினர்.
பத்திரிக்கைகள்
இந்த விஷயத்தில் கவனம் செலுத்த தொடங்கினர்.விசாரித்ததில் மேரி ஆன் வடக்கு
இங்கிலாந்தில் வாழ்ந்த காலங்களில் அவரது மூன்று கணவர்கள், காதலன், நண்பர், அவரது
தாய் மற்றும், அவரது ஒரு டஜன் குழந்தைகளும் இரைப்பை காய்ச்சல் மற்றும் வயிற்றுவலி
காரணமாக உயிரிழந்தனர் என்பது உள்ளூர் பத்திரிக்கையால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை
தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேரி அஸ்தெனிக் விஷம் கொடுத்து தன் குடும்ப
உறுப்பினர்கள் அனைவரையும் கொன்றார் என தெரிய வந்தது. இதையடுத்து 24 மார்ச் 1873
அன்று த்ர்காம் கவுண்டி கோல் என்னும் இடத்தில் மேரி தூக்கிலிடப்பட்டார்.
04.இல்ஸா
கோச்(1906-1967)
“ஹெக்ஸ்
வான் புச்சென்வால்ட்”, விட்ச் ஆஃப் புச்சென்வால்ட் அல்லது புச்சென்வால்ட்
ஸ்கெம்ப்லர், பிச் ஆஃப் புச்சென்வால்ட் என்று அழைக்கப்படும் இல்ஸா கோச் உலகின்
மோசமான பெண்களில் ஒருவராக அறியப்படுகிறார். புச்சென்வால்ட்டில் இவர் செய்த
அநீதிகள் காரணமாகவே இவருக்கு இந்த புனைபெயர்கள் வந்தன.
கார்ல்
கோச் என்பவரின் மனைவியான இவர் ஜெர்மானிய வதை முகாம்களில் தளபதியாக பணியாற்றியவர்.
இவர்
புச்சென்வால்ட் வதை முகாமில் 1937 முதல் 1941 வரை பணியாற்றினார். பிறகு 1941 முதல்
1943 வரை மஜ்தானெக் எனும் வதை முகாமில் பணியாற்றினார். ஜெர்மனியின் கமெண்டரான தனது
கணவரின் ஆதாரவால் இவர் வதை முகாம்களில் பல கொடுமைகளை செய்து வந்தார்.
இவரால்
கொலை செய்யப்பட்ட கைதிகளின் கைகளில் உள்ள பச்சைக்குத்தல்களை பார்க்கும்போது இல்ஸா
அவர்களை எவ்வளவு மோசமாக துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.
இவர்
2,50,000 ரிச்சஸ் மார்க்ஸ் (அப்போதிருந்த பணத்தின் பெயர்) மதிப்புள்ள உள்
விளையாட்டு அரங்கை கட்டியதற்காக அவருக்கு புச்சென்வால்ட்டின் தலைமை
மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றார். ஆனால் அந்த பணங்கள் அனைத்தும் கைதிகளிடம்
இருந்து திருடப்பட்டது என கூறப்படுகிறது.
01
செப்டம்பர் 1967 அன்று இவர் பெண்களுக்கான சிறையில் தானே தூக்கு போட்டு தற்கொலை
செய்துக்கொண்டார்
03.இர்மா க்ரேஸ்
(1923-1945)
“பிட்ச்
ஆஃப் பெல்சன்” என அழைக்கப்படும் இர்மா க்ரேஸ். இவர் ஜெர்மனி நாஜிக்களின் வதை
முகாம்களான ராவன்ஸ்ப்ரூக், ஆஷ்விட்ஸ் மற்றும் பெர்கன்- பெல்சன் என்ற மூன்று வதை
முகாம்களில் காவலராக பணிப்புரிந்துள்ளார்.
இவர்
1943 ஆம் ஆண்டு ஆஷ்விட்சுக்கு காவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கே சென்ற அவர்
அந்த ஆண்டின் இறுதிக்குள்ளேயே இரண்டாவது மூத்த மேற்பார்வையாளராக பதவி உயர்வு
பெற்றார்.
30,000
யூத பெண் கைதிகள் அவரது பொறுப்பில் இருந்தனர். அவர்களை வதைப்பதன் மூலம் தனது பணியை
சிறப்பாக செய்தார் இர்மா க்ரேஸ். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நாய்களை கொண்டு அந்த
பெண்களை மிருகத்தனமாக குதற செய்தல், பாலியல் துன்புறுத்தல்கள், வட்டமாக
நிற்கவைத்து துப்பாக்கியால் சுட செய்தல், எரிவாயு அறைக்குள் பெண்களை அடைப்பது என
வித விதமாக வழிகளில் அவர்களை சித்ரவதை செய்து வந்தார்.
உடலால்
மனதால் அவர்கள் அனுபவிக்கும் சித்ரவதையை ரசித்து பார்த்துக்கொண்டிருப்பார் இர்மா
க்ரேஸ். அவர் தனது கால்களில் கணமான காலணியும் கையில் ஒரு துப்பாக்கியும் எப்போதும்
வைத்திருப்பார்
02.கேத்ரின் நைட்
1956
இல் பிறந்தவர் கேத்ரின் நைட். வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட
முதல் பெண் கேத்ரின் நைட் ஆவார். வரலாற்றில் உறவுகளின் மீது வன்மத்தை கொண்டிருந்த
ஒரு பெண் இவர். இவர் தனது முன்னாள் கணவரின் பல்லை பிடுங்கியுள்ளார். தனது மற்றொரு
கணவரின் நாய்க்குட்டியை அவரது கண் முன்னாலேயே கழுத்தை நெறித்து வெட்டி
கொன்றுள்ளார்.
ஜான்
சார்லஸ் தாமஸ் என்பவரை கொடூரமாக கொன்றதற்காகவே இவர் சிறை சென்றார். இவர்கள்
இருவரும் நல்ல உறவில் இருந்த போதும் நைட் அவரை கொடூரமாக கொன்றார்.
அவரது
உடலை நைட் 37 முறை குத்தி கொன்றார். பிறகு அவரது உடலில் உள்ள தோளை உரித்து சட்டை
மாட்டும் இடத்தில் கோர்ட்டுக்கு அருகே தொங்கவிட்டார்.
அவரது
தலையை வெட்டி சூப் பானையில் போட்டார். பிறகு அவரது உடலை வெட்டி அதோடு காய்கறிகளை
போட்டு கிரேவி என்னும் உணவை தயாரித்தார். இந்த குற்றத்திற்காகதான் அவருக்கு
வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
01.எலிசெபத் பாத்தரி
(1560- 1614)
எலிசெபத்
பாத்தேரி ஹங்கேரிய தொடர் கொலையாளிகளில் மிகவும் பிரபலமானவர். அவரது கோட்டைக்கு
விவசாய வீட்டு சிறுமி பெண்களை வேலைக்கு அமர்த்தினார். அவர்களுக்கு அதிக சம்பளம்
தருவதாக கூறி வேலைக்கு வைத்தார். ஆனால் அதற்கு பிறகு அந்த பெண்களை யாருமே
பார்க்கவில்லை.
இதனால்
அந்த பெண்கள் காணாமல் போய்விட்டதாக வதந்திகள் பரவி வந்தன. இந்த செய்திகள் இரண்டாம்
மேத்யூஸ் அரசரின் காதுகளுக்கு சென்றது. அவர் அரசாங்கத்தின் பெரிய மனிதர்களை இந்த
செய்தி குறித்து ஆராய அனுப்பினார்.
அந்த
கோட்டைக்கு சென்றவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சிகள் காத்திருந்தன. அங்கே சிலர்
காயமடைந்தும் சிலர் அறைக்குள் பூட்டப்பட்டும் இருந்தனர். அவர்கள் நீண்ட காலமாக
கொடுமைப்படுத்தப்பட்டு இருந்தனர். நீண்ட காலத்திற்கு அவர்களை அடித்திருந்தார்கள்,
கைகளை எரித்தல் மற்றும் சிதைத்தல், சிலருக்கு முகங்கள் மற்றும் பிறப்புறுக்கள்
சிதைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு
இருபத்தைந்து வருடத்தில் நூற்றுகணக்கான ஆட்கள் இவரால் பாதிக்கப்பட்டதாக
கூறப்படுகிறது. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்ததால் எலிசெபத் விசாரனைகளுக்கு
வரவில்லை. ஆனால் அவர் சாகும் வரை வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். அவர்
இறந்தவர்களின் இரத்தத்தில் குளித்தார் என்ற வதந்தியும் அப்போதைய காலக்கட்டத்தில்
பரவி வந்தது. இப்படியாக வரலாற்றில் மிக மோசமான செயல்கள் செய்த முக்கியமான 10
பெண்களாக இவர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக