Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

சுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணாமல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத மர்மம்!

போவது 2020

பனாமா வனப்பகுதியில் 2014ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு பெண்களின் மர்ம மரணம் இன்று வரை விடை கிடைக்காத புதிராக உள்ளது.

கிரெமர்ஸ் மற்றும் ஃப்ரூன் இருவரும் நெதர்லாந்தில் உள்ள அமர்ஸ்ஃபோர்ட்ல் படித்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் ஆறு மாத பயணமாக பனாமா சென்றனர். அவர்கள், இருவரும் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி, வீட்டை விட்ட வெளியேறி நாயுடன் போகெட்டிலுள்ள பாரு எரிமலையை சுற்றியுள்ள காடுகளின் வழியாக நடந்து சென்றனர்.

அந்த நடை பயணத்தில் தன்னார்வத் தொண்டு, கலைகள், கைவினைப்பொருட்கள் பற்றி கற்றுக் கொள்வது, மற்றும் ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக் கொள்வது போன்றவற்றில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இரண்டு வாரங்கள் பனாமா வனப்பகுதியை சுற்றிவிட்டு அடுத்த நான்கு வாரங்களும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து உள்ளூர் பள்ளியில் சமூக பணி செய்யத் திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி தான் அவர்கள் இருவரும் தங்கள் வீடுகளில் ஏப்ரல் 1 2014 அன்று விடை பெற்று வனப்பகுதிக்கு நடை பயணம் மேற்கொண்டனர்.

இருவரும், புறப்படும் முன் பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டனர். அதில், அவர்கள் உள்ளூர் சுற்று பயணத்தில் செய்ய இருந்தவற்றை பற்றி விவரித்திருந்தனர். அத்துடன், தன்னுடன் டச்சுக்காரர் ஒருவர் வருவதாகவும் குறிப்பிட்டனர்.

மாயம்!
 
ஏப்ரல் 1 இரவில், இந்த பதிவை பார்த்த இரு பெண்களின் குடும்பத்தினருக்கும் ஏதோ தவறு நடந்துள்ளது என்று தோன்றியுள்ளது. அதன் பின் அவர்களுடன் சென்றிருந்த நாய் வீட்டிற்கு திரும்பியுள்ளது. அந்த நாய் வீட்டு வாசலில் வந்து ஒலி ஒன்றை எழுப்பியுள்ளது. ஆனால், பெண்கள் இருவரும் வரவில்லை.

இதை கண்ட அந்த பெண்களின் பெற்றோர் இரவில் அவர்களை தேட சென்றனர். ஆனால், பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்திருந்ததால் அதிகாரிகள் அவர்களை தடுத்தனர்.


போலீஸ் தேடுதல்!

தொடர்ந்து ஏப்ரல் 2 காலையில் அவர்கள் தேட திட்டமிட்டனர். அப்போது, அந்த இரண்டு பெண்களும் ஒரு வழிகாட்டியை சந்திக்க திட்டமிட்டு அதை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட அதிகாரிகள் அது குறித்தும் விசாரிக்க துவங்கினர். அத்துடன், காலையில் காடுகளில் அப்பகுதி மக்களின் உதவியுடனும், அதிகாரிகள் வான் வழியாகவும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஏப்ரல் 6ஆம் தேதி வரை அந்த பெண்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அச்சம் கொண்டு கிரெமர்ஸ் மற்றும் ஃப்ரூன் குடும்பத்தினர் நெதர்லாந்திற்கு சென்று துப்பறிவாளர்களை அழைத்து வந்தனர். அந்த துப்பறிவாளர்கள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து பந்து நாட்கள் காடுகளில் தேடினர். நாட்கள் வாரங்களானது, எனினும் இரண்டு பெண்களை பற்றியும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இளம் பெண்களின் பொருட்கள் சிக்கியது!

பின்பு, போலீசார் தேடுதல் வேட்டையை குறைத்துக் கொண்டனர். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், நெல் மூட்டையில் நீல நிற பையை கண்டார். அவர், அது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த பையில் இரண்டு சன்கிளாஸ், இந்திய மதிப்பில் 6,231.82 ரூபாய், பாஸ்போர்ட், தண்ணீர் பாட்டில், மற்றும் இரண்டு உள்ளாடைகள் இருந்தன. அத்துடன் அந்த பெண்களில் செல்போன் மற்றும் அவர்கள் எடுத்துச் சென்ற கேமராவும் இருந்தது.

போலீசார் அந்த செல்போன் மற்றும் கேமராவை வைத்து விசாரணை துவங்கினர். அதில், பெண்கள் காணாமல் போன பின்பும் கிட்டத்தட்ட 10 நாட்கள் செல்போன் செயல்பாட்டில் இருந்துள்ளது. முதல் நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 77 முறை அவர்கள் போலீசாருக்கு 112 எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.

அவசர அழைப்பு!

முதல் இரண்டு அவசர அழைப்புகளும் கிரெமர்ஸ் மற்றும் ஃப்ரூன் 112 அவசர எண்ணுக்கு அழைத்திருந்தாலும், அது அடர்ந்த காடு என்பதால் அது கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அனைத்து அழைப்புகளிலும் ஒரு அழைப்பு மட்டும் ஒருவரை தொடர்பு கொள்ள முடிந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அதன் பின் ஏப்ரல் 6 ஆம் தேதி கிரெமர்ஸின் செல்போன் லாக் தவறான எண்ணிட்டு பலமுறை திறக்க முற்பட்டதாக கண்டறியப்பட்டது. அதன் பின் சார்ஜ் இல்லாமல் 11க்குள் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது.

கேமரா பதிவுகள்!

கேமராவில் முதல் புகைப்படத்தில் அவர்கள் புறப்பட்டது பற்றியதாக இருந்தது. அந்த புகைப்படம் கான்டினென்டல் டிவைட் அருகே ஒரு பாதையை காட்டியது.

இருப்பினும் அடுத்து தொடர்ந்து வந்த புகைப்படங்கள் வருத்ததை தருவதாக இருந்தது. அதில், சாக்லெட் கவர்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் மிகவும் கவலை தருவதாக இருந்த கிரெமர்ஸின் தலையின் பின்புறத்தில் வடிந்த இரத்தம் போன்றவை இடம்பெற்றிருந்தது.

பையை கண்டுபிடித்தப்பின் கிரெமர்ஸின் ஆடைகளை போலீசார் கண்டுபிடித்தனர். அது ஆற்றின் கரையோரம் கிடந்ததை கண்டறிந்தனர். அதே பகுதியில் இரண்டு மாதங்களுக்கு பின் ஒரு இடுப்பு எலும்பு மற்றும் கால் எலும்பு ஆகியவை கிடப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

இரு பெண்களின் எலும்புகள் கண்டுபிடிப்பு!
அதன் பிறகு, இரு பெண்களின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ஃப்ரூனின் எலும்புகள் இயற்கையாகவே சிதைந்திருப்பதை போன்று இருந்தது.க்ரெமர்ஸின் எலும்புகள் வெளுக்க வைக்கப்பட்டது போன்று இருந்தது.

அதை தொடர்ந்து போலீசார் உள்ளூர்வாசிகள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் பிற நடை பயணிகளை விசாரித்தனர். ஆனால், போலீசாருக்கு புகைப்படங்கள், அழைப்புகள் தவிர வேறு எந்த ஆதாரமும் சிக்கவில்லை. அதேபோல் மரணத்திற்கான காரணங்களும் கண்டறிய முடியவில்லை.

இன்று வரை கிரிஸ் பிரெமர்ஸ் மற்றும் லிசேன் ஃப்ரூன் காணாமல் போய் இறந்தது ஒரு மர்மமாகவே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக