லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்
அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில் 160 பேர் உயிரிழந்தனர் என்பதும் சுமார் 6
ஆயிரம் பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி பெய்ரூட் பகுதியில்
உள்ள சுமார் 3 லட்சம் கட்டிடங்கள் நொறுங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது இந்த வெடி விபத்து அமோனியம் நைட்ரேட்டால்தான்
ஏற்பட்டதா அல்லது வெடிகுண்டு விபத்தா? என்ற சந்தேகத்தை தற்போது சிலர் கிளம்பியுள்ளனர்.
இந்த வெடி விபத்து நடந்த போது மஞ்சள் நிறத்தில் புகை வந்ததாகவும் அதன் பின்னர் கருஞ்சிவப்பு
நிறத்தில் புகை வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் அமோனியம் நைட்ரேட் மட்டுமின்றி லித்தியமும் கலந்திருக்க
வாய்ப்பு இருந்தது என்றும் அதனால்தான் இந்த நிறங்களில் புகைகள் வந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே அமோனியம் நைட்ரேட் மட்டுமன்றி போர் தளவாடங்களும் குடோனில் இருந்திருக்கலாம் என்று
கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக