4ஜி
ஆதரவு, டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களோடு ஜியோ போன் 2, மாதம் ரூ.141
செலுத்தி வாங்கலாம் என ஜியோவின் வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4ஜி ஆதரவு, டூயல்
சிம் அம்சம்:
பிரபல
டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபோன் 2 தொலைபேசியை ஒரு மாதத்திற்கு
ரூ.141 என்ற இஎம்ஐ வசதியில் வழங்குகிறது. இந்த புதிய இஎம்ஐ சலுகையானது ஜன்மாஷ்டமி
சலுகையின் ஒரு புதிய சலுகையாக கருதப்படுகிறது.
ஜியோ
போன் 2 விலை
ஜியோ
போன் 2 விலை ரூ.2,999 ஆக விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.141 இஎம்ஐ-ல்
தொடங்கி விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சலுகையானது ரிலையன்ஸ் ஜியோவின்
அதிகாரப்பூர்வ இணையத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
கிரெடிட்
கார்டுகளுக்கு மட்டுமே
ஜியோ
போன் 2 வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே இந்த
சலுகை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஜியோ போன் ரூ.99 விலையில்
ஆர்டர் செய்து 3-5 நாட்களுக்குள் போன் கைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜியோ
ஸ்டோர் அல்லது ஜியோ சில்லரை விற்பனையாளர்கள்
ஜியோ
போன் வாங்கிய பயனர்கள் தங்கள் ஜியோ சிம் அருகிலுள்ள ஜியோ ஸ்டோர் அல்லது ஜியோ
சில்லரை விற்பனையாளர்களிடம் இருந்து செயல்படுத்த முடியும் என ஜியோ தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ
போன் 2 சிறப்பம்சங்கள்
ஜியோ
போன் 2 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஜியோ போன் 2 ஆனது 2.4 இன்ச்
க்யூடபிள்யூஜிஏ டிஸ்ப்ளே வசதி உள்ளது. மேலும் இதில் வாட்ஸ் ஆப், யூடியூப்,
பேஸ்புக் மற்றும் கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளின் ஆதரவுகள் இதில்
இருக்கிறது.
க்வர்டி கீபோர்ட் அம்சம்
JioPhone
2 முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று க்வர்டி கீபோர்ட் அம்சமாகும். மேலும் இதில் 2000
எம்ஏஹெச் பேட்டரி ஆதரவோடு 24 இந்திய மொழிகளின் ஆதரவையும் இதில் வழங்குகிறது.
512
எம்பி ரேம், 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
இது
குரல் கட்டளைகளின் ஆதரவு மற்றும் பிரத்யேக குரல் உதவியாளர் பொத்தானுடன் வருகிறது.
இந்த ஜியோ போன் 2-வில் 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி
உள்ளது. கூடுதலாக 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு பொருத்தும் வசதி இதில் உள்ளது.
இரட்டை நானோ சிம் கார்டு ஆதரவோடு 4G VoLTE ஆதரவும் உள்ளது.
2 எம்பி பின்புற கேமரா
மேலும்
ஜியோ போன் 2-ல் 2 எம்பி பின்புற கேமரா விஜிஏ முன்புற கேமரா உள்ளிட்ட அம்சம்
உள்ளது. இந்த இணைப்பில் எஃப்எம், ப்ளூடூத், வைபை, ஜிபிஎஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு
அம்சங்கள் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக