Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

உங்கள் Virtual Visiting Card ரெடியா? Google-ன் புத்தம் புதிய அம்சம்!!

உங்கள் Virtual Visiting Card ரெடியா? Google-ன் புத்தம் புதிய அம்சம்!!

கூகிள் (Google) அதன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த அவ்வப்போது பல புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. அந்த வகையில், நிறுவனம் இந்திய பயனர்களுக்காக ஒரு சிறப்பு 'People Cards’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் கூகிள் சர்ச்சில் மெய்நிகர் விசிட்டிங் கார்டுகளை (Virtual Visiting Card) உருவாக்க முடியும். வர்சுவல் விசிட்டிங் கார்டு மூலம், பயனர்கள் தங்கள் வலைத்தளம், சமூக ஊடக கணக்குகள் மற்றும் பிற தகவல்களை Google சர்சில் பகிர்ந்து கொள்ள முடியும்.
Introducing the people card on Google Search.
Showcase your business, passion or portfolio when people search for you on Google.
— Google India (@GoogleIndia) August 11, 2020
இதற்கு Google Account இருக்க வேண்டியது அவசியம்
இந்த அம்சம் கூகிளின் Knowledge Graph-ஐ பயன்படுத்தி பயனர் கொடுத்த தகவலைக் காட்டுகிறது. சேவையைப் பயன்படுத்த, பயனர் மொபைல் எண்ணை வழங்க வேண்டும். கூகிள் சர்ச்சில் People Card-ஐ உருவாக்க, பயனருக்கு Google கணக்கு இருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த சேவை மொபைல் பயனர்களுக்கானது
நிறுவனம் தற்போது இந்த சேவையை மொபைல் பயனர்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறது. இதன் பொருள் உங்கள் பொது சுயவிவரத்தை உருவாக்க, உங்கள் மொபைல் சாதனத்திலிருந்து Google கணக்கில் உள்நுழைய வேண்டும். இந்த சேவை தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.
Fake Profile மற்றும் தவறான உள்ளடக்கம் தடைசெய்யப்படும்
இந்த சேவையின் மூலம் சரியான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க முயற்சிப்பதாக கூகிள் கூறுகிறது. இந்த சேவையின் அறிமுகத்தால் போலியான பயனர்கள், தவறான மொழி மற்றும் தரமற்ற உள்ளடக்கம் ஆகியவற்றை அடையாளம் காண முடியும். அதே நேரத்தில், இந்த சேவையின் மூலம் விமர்சனம் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூகிளின் கொள்கையை மீறும் உள்ளடக்கங்களையும் நிறுவனம் கட்டுப்படுத்தப் போகிறது. People Card-ஐ தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, ஒரு கணக்கிற்கு ஒரே People Card தான் உருவாக்க முடியும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
Google-லில் இந்த வழியில் உங்கள் People Card-ஐ நீங்கள் உருவாக்கலாம்
உங்கள் People Card-ஐ உருவாக்க, முதலில் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும். இதற்குப் பிறகு நீங்கள் 'add me to search'-ல் சர்ச் செய்ய வேண்டும். இதைச் செய்த பிறகு, 'add yourself to Google search’ என்ற ஆப்ஷன் வரும். அந்த மெசேஜில் Tap செய்யுங்கள். Tap செய்த பிறகு கூகிள் உங்கள் தொலைபேசி எண்ணைக் கேட்கும். உள்ளிடப்பட்ட மொபைல் எண்ணில் தோன்றும் 6 இலக்க குறியீட்டைக் கொண்டு எண்ணை வெரிஃபை செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, கூகிள் உங்களுக்கு ஒரு படிவத்தை வழங்கும். இதில், பொது சுயவிவரத்தை உருவாக்க தேவையான தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் பணி, படிப்பு தவிர பல விவரங்களை உள்ளிடுவதற்கான வசதியை இங்கே பெறுவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக