Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

அம்பானியின் அடுத்த அதிரடி திட்டம்? ஃபியூச்சர் குழுமத்தில் ரூ.24,713 கோடி முதலீடு செய்ய திட்டம் ..!



கொரோனா நெருக்கடி காலத்தில் கூட, பல ஆயிரம் கோடி முதலீடுகளை பெற்று வந்த முகேஷ் அம்பானி, தற்போது முதலீடுகளை செய்ய ஆரம்பித்துள்ளார்.

முன்னதாக சில நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது பிக் பஜார் உட்பட பியூச்சர் குரூப் நிறுவனத்திற்கு சொந்தமான சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள், குடோன்களை 24,713 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், பியூச்சர் குழுமத்தின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடை பங்குகள் அனைத்தும் ரிலையன்ஸ் ரீடையில் மற்றும் பேஷன் லைப்ஸ்டைல் லிமிட்டெட் நிறுவனத்திற்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதுவும் அடங்கும்


மேலும் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சேமிப்பு கிடங்குகள் ரிலையன்ஸ் ரீடையில் வெண்சர் லிமிடெட் வசம் ஒப்படைக்கப்படும். அதில், ரிலையன்ஸ் ரீடையில் மற்றும் பேஷன் லைப்ஸ்டைல் லிமிடெட்டில் முதலீடுகள் செய்யவும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய பங்கு

இந்த இணைப்பு நடவடிக்கையின் மூலம் வீடுகளை புதுமையாக்குவதில் மகிழ்ச்சியடைவதாக ரிலையன்ஸ் ரீடையில் வெண்சர் நிறுவன இயக்குநர் இஷா அம்பானி தெரிவித்துள்ளார். பியூச்சர் குரூப் நிறுவனத்தின் வணிகம், நவீன சில்லரை விற்பனையில் முக்கிய பங்கேற்றுவதாகவும் இஷா தெரிவித்துள்ளார்.

எவையெல்லாம் கையகப்படுத்தல் 

இந்த முதலீட்டின் மூலம் பிக்பஜார், எம்பிபி, ஃபுட்ஹால், ஈஸிடே, நீலகிரி சென்ட்ரல் அன்ட் பிராண்ட் பேக்டரியை கையகப்படுத்தலாம் என்றும், அதோடு சில கடன் மற்றும் பொறுப்புகளையும் ரிலையன்ஸ் எடுத்துக் கொள்ளும் என்றும் ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல கோடி கடன்


சில ஆதாரங்களின் படி மொத்தம் 24,713 கோடி ரூபாயில், 12,000 கோடி ரூபாய் கடனை உள்ளடக்கியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த ஒப்பந்தத்திற்கு பின்னரும் கூடஃபியூச்சர் குழுமத்திற்கு கடன் மற்றும் சர்பிளஸ் கேஷ் என்பது 3,000 கோடி ரூபாய் முதல் 4,000 கோடி ரூபாய் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பலப்படுத்தும் விதமாக அடுத்தடுத்த முதலீடு

பலப்படுத்தும் விதமாக அடுத்தடுத்த முதலீடு
ரிலையன்ஸ் ஜியோ எப்படி குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே தனக்கென தனது வாடிக்கையாளர்களை கவர்ந்து, இன்று முதலாவது நெட்வொர்க்காக வலம் வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் ஜியோ மார்டினை பலப்படுத்தும் விதமாக தொடர்ந்து முதலீடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக