Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

3 விமான நிலையங்கள் தனியாருக்கு- அமைச்சரவை ஒப்புதல்!

நாட்டில் உள்ள விமான நிலையங்களில் 3ஐ தனியாருக்கு அளிக்க இந்திய விமான நிலைய நிர்வாகம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தகவலை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகரும், ஜிட்டேன்ந்த்ர சிங்கும் நிருபர்களுக்குக் கூட்டாகத் தெரிவித்தனர்.

முன்னதாக மோடி அரசு நாட்டில் உள்ள இந்திய விமான நிலைய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில் 12ஐ தனியாருக்கு அளிக்க முடிவு செய்திருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இப்போதுவரை 6 விமான நிலையங்கள் தனியாருக்கு அளிக்கப்பட்டன.

அந்த 6 விமான நிலையங்கள், அகமதாபாத், மங்களூர், லக்னோ, குவ்ஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் ஆகும். இந்த சூழலில் இப்போது மேலும் 3 விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த தனியார் மயமாக்கலுக்குத் தொழிலதிபர் அதானியின் குழுமத்துடன் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதானியின் குழுமம் அதிக தொகைக் கொடுத்து விமான நிலையங்களை நிர்வகிக்க ஆர்வம் காட்டியதன் விளைவாக, அரசுடன் சலுகை ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி அரசும்-குறிப்பிட்ட நிர்வாகமும் இணைந்து விமான நிலையத்தை நிர்வாகம் செய்யும்.

மத்திய அமைச்சரவையே சொல்லியாச்சு... வங்கிப் பணி தேர்வுகளை இனி இவங்க தான் நடத்துவாங்க!!

இந்த சூழலில் இப்போது ஜெய்ப்பூர், கவ்ஹாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அதானியிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “மேலும் பல விமான நிலையங்களைத் தனியாருக்கு வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும். அடுத்த 10 வருடத்திற்குள் புதிதாக 100 விமான நிலையங்கள் கட்ட திட்டமிட்டுள்ளோம்” என்கிறார்.

விமான போக்குவரத்துத் துறையின் கீழ் வரும் இந்திய விமான நிலைய நிர்வாகம், நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட விமான நிலையங்களை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக