தேசிய அளவிலான பணியாளர் தேர்வு முகமைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளின் காலிப் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வுகளை இனி பணியாளர் தேர்வு முகமையே நடத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம்,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், கவுகாத்தி ஆகிய இடங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை தனியார் முதலீட்டில் மேம்படுத்தப்பட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோன்று, நடப்பாண்டில் (2020-21) கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கரும்பு குவிண்டால் ஒன்றுக்கு 285 ரூபாய் கொள்முதல் விலையாக விவசாயிகளுக்கு கிடைக்கும்.
முக்கியமாக மத்திய அரசு பணியிடங்கள் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் பணியிடங்களுக்கு தேசிய அளவில் தகுதித் தேர்வுகளை நடத்த, பணியாளர் தேர்வு முகமையை ஏற்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக