கடந்த
நவம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா என்ற மாவட்டத்தில் பிரகாஷ் என்ற
நபர் தனது வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை
செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை வீட்டின் அருகிலேயே பாலிதீன் கவரை கொண்டு
மறைத்து விட்டு தப்பி ஓடி விட்டார்
இதுகுறித்து
பிரகாசம் மனைவியே காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் பின்னர் போலீசாரின் தீவிர
தேடுதல் வேட்டைக்கு பின் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு ஆந்திர
மாநிலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் 35 பேர் சாட்சி
கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த
வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்ட நிலையில் நேற்று தீர்ப்பு
வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் குற்றவாளி என அதை
உறுதி செய்த நீதிமன்றம். அவருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த
வழக்கு 9 மாதங்களில் விரைவாக விசாரணை செய்து தூக்கு தண்டனையும் தீர்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக