அமெரிக்காவின்
முன்னணி டெக் நிறுவனமான ஹெச்பி தனது உற்பத்தி ஆலையை, சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ
பெரும்புதூரில் துவங்கியுள்ளது.
முன்னணி
ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் நிறுவனமான இது, கம்ப்யூட்டர் உற்பத்தியினை
சென்னைக்கு அருகில் Flex -யில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த
ஆலையானது தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும்
டெக்ஸ்டாப்களை தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை
ஹெச்பி ஆலை
இந்த ஆலையானது துறை முகத்திற்கு
அருகிலும், ஹெச்பியின் உதிரி பாகங்கள் ஆலை பெங்களுருவில் உள்ள நிலையில், இது
அதற்கு அருகிலும் இருக்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆலையின்
இருப்பிடமானது இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து விரைவாகவும் திறமையாகவும் வாங்க
நிறுவனத்திற்கு உதவும் என்றும் ஹெச்பி தெரிவித்துள்ளது.
மிக்க
மகிழ்ச்சி
இந்தியாவில் நாங்கள் எங்கள்
வளர்ச்சியினை மேம்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள்
வாடிக்கையாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவை பூர்த்தி செய்வதில் மிக்க
மகிழ்ச்சியடைகிறோம். ஹெச்பி ஏற்கனவே உத்தரகண்ட் மாநிலத்தின் பந்த் நகரில் சொந்த
உற்பத்தி ஆலையை கொண்டுள்ள இந்த நிறுவனம், தற்போது தனது நீண்டகால வளர்ச்சியினை
கூறும் விதமாக சென்னையிலும் துவங்கியுள்ளது.
ஹெச்பி முதலிடம்
மார்ச் 2020 காலாண்டில் இந்தியாவின்
பாரம்பரிய கம்ப்யூட்டர் சந்தையில், 28.2% பங்கினைக் கொண்டு ஹெச்பி முதலிடத்தில்
உள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனமான ஐடிசி தெரிவித்துள்ளது. இந்த காலாண்டில் மொத்த
ஏற்றுமதி கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 16.7% குறைந்து, 1.8 மில்லியன் யூனிட்களை
ஏற்றுமதி செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக