>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 26 ஆகஸ்ட், 2020

    Aadhar Card-ல் இந்த 5 விஷயங்களை update செய்ய எந்த ஆவணமும் தேவை இல்லை!!

    ஆதார் அட்டை (Aadhar Card) மிக முக்கியமான அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு அரசாங்க திட்டத்தின் (Government Schemes) சலுகைகளையும் பெற ஆதார் தேவை. எனவே, ஆதாரில் சரியான தகவல்கள் இருப்பது மிகவும் முக்கியமாகும். பல முறை கவனக்குறைவாக ஆதாரில் நாம் சில தவறுகளை செய்து விடுகிறோம்.


    ஆதாரில் பல வகையான மாற்றங்களைச் செய்ய முடியும் என்றாலும், சிலவற்றை மாற்றுவதற்கு அதற்கு ஏற்ற ஆவணங்கள் தேவைப்படுகின்றன. சில தகவல்களை மாற்றுவதற்கு எந்த ஆவணங்களும் தேவைபடுவதில்லை. இதற்கு, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியது மட்டும்தான்.


    எந்த ஆவணமும் இல்லாமல் ஆதாரில் எந்தெந்த தகவல்களை எல்லாம் அப்டேட் செய்ய முடியும் என்பதை இப்போது பார்க்கலாம். 

    கீழ்கண்ட அப்டேட்டுகளுக்கு ஆவணங்கள் தேவையில்லை:


     நீங்கள் புகைப்படம், பயோமெட்ரிக்ஸ், பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றால், இதற்காக நீங்கள் எந்த வகையான ஆவணத்தையும் வழங்க தேவையில்லை. இதற்காக, உங்கள் ஆதார் நகலுடன் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு, முன்னரே அபாயிண்ட்மெண்ட் பெற்றுக்கொண்டு செல்லுங்கள். உங்கள் தேவைக்கேற்ப, அனைத்தும் ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும். UIDAI ட்வீட் மூலம் இந்த தகவலை வழங்கியுள்ளது.


    ஆதார் சேவை மையங்களில் (Aadhar Base Centers), புதிய ஆதார் பதிவு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மொபைல் எண் புதுப்பிப்பு, மின்னஞ்சல் ஐடி புதுப்பிப்பு, பிறந்த தேதி, பாலின புதுப்பிப்பு, பயோமெட்ரிக் புதுப்பிப்பு போன்ற சேவைகள் கிடைக்கின்றன.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக