Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

தோள்பட்டையில இந்த இடத்துல வலிக்குதா? இதுதான் காரணம்... இந்த வீட்டு வைத்தியத்த செய்ங்க...


ஒரே இடத்தில் ஒரே பொசிஷனில் உட்கார்ந்து கொண்டு வேலை பார்க்கும் பலருக்கும் இருக்கும் பிரச்சினை தோள் பட்டை வலியும் முதுகுவலியும் தான். அதை பெரிய பிரச்சினையாக வளருவதற்கு முன்னால் கீழே சொல்லப்படும் 6 விஷயங்கள் மூலமாக சரிசெய்து கொள்ளுங்கள். அதற்கான காரணத்தைம் வீட்டு வைத்தியத்தையும் இங்கே பார்க்கலாம்.


தீவிர முதுகுவலி, தோள்பட்டை வலி, குதிகால் மற்றும் கழுத்துவலி, சோர்வு, அடி முதுகில் நாட்பட்ட வீக்கம், எடை அதிகரிப்பு மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஸ்பான்டிலிடிஸின் சில பொதுவான அறிகுறிகளாகும். ஸ்பான்டிலிடிஸ் முதுகுத்தண்டை பாதிக்கும் ஒரு தீவிரமான வலிமிகுந்த நிலையாகும்.  

யாருக்கு வரும்?


பொதுவாக ஸ்பான்டிலிடிஸ் முதியவர்களையே பாதிக்கும் ஆனால் இன்றைய நாட்களில் இளைஞர்களிடையேயும் இது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. இது நீண்ட வேலை நேரங்களில் மோசமான உடல் தோரணையுடன் தொடர்ந்து உட்கார்ந்திருப்பதால் ஏற்படுகிறது. குறிப்பான கம்ப்யூட்டர் முன் நாள்கணக்கில் அமர்ந்திருப்பவர்கள் இந்த பிரச்சினையை அதிக அளவில் சந்திக்கிறார்கள்

தீராத வலி


தீவிரமான முதுகு வலியானது உங்கள் உடல் இயக்கத்தை தடை செய்து உங்கள் தினசரி வேலைகளையும் உற்பத்தி திறனையும் பாதிக்கும். தீவிர முதுகுவலி, தோள்பட்டை வலி, குதிகால் மற்றும் கழுத்துவலி, சோர்வு, அடி முதுகில் நாட்பட்ட வீக்கம், எடை அதிகரிப்பு மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஸ்பான்டிலிடிஸின் சில பொதுவான அறிகுறிகளாகும். ஸ்பான்டிலிடிஸ் மரபணு காரணங்கள், மன அழுத்தம், செயல்பாடுகள் குறைவான வாழ்க்கை முறை, செரிமானக் குறைபாடு, நீண்ட வேலை நேரங்கள் மற்றும் உடற் பருமன் போன்றவற்றால் ஏற்படலாம்.

யோகாசனம்


ஸ்பான்டிலிடிஸுக்கு சிகிச்சை அளிக்கவும் அது வராமல் தடுக்கவும் யோகா ஒரு சிறந்த சிகிச்சை முறையாகும். ஸ்பான்டிலிடிஸை கையாளுவதில் யோகா மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. யோகா செய்வதால் முதுகு தண்டு விறைத்து இறுக்கமடைவதை குறைக்க உதவுவதோடு தண்டுவடத்தின் நெகிழ்வுத் தன்மையையும் மேம்படுத்துகிறது.
ஸ்பான்டிலிடிஸ் வராமல் தடுக்கவும் வந்தால் சிகிச்சை அளிக்கவும் சில சிறந்த யோகாசன முத்திரைகள் இருக்கின்றன. அவை சலபாசனம், வக்ராசனம், அர்த்த சக்ராசனம், தனுராசனம் மற்றும் சவாசனம் போன்றவை ஆகும். இந்த யோகா முத்திரைகள் முதுகின் மையப் பகுதியையும் முதுகுத் தண்டுவடத்தை சுற்றியுள்ள தசைகளையும் வலிமையாக்க உதவுகிறது. ஆனால் எந்த ஒரு உடற்பயிற்சியையும் செய்வதற்கு முன்னால் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.

உடல் வலிமையடைதல்


ஸ்பான்டிலிடிஸ் வராமல் தடுக்கவும் வந்தால் சிகிச்சை அளிக்கவும் நன்கு சீரமைக்கப்பட்ட உடல் தோரணை மிகவும் முக்கியமானது. வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும், ஏன்… தூங்கும்போது கூட உங்கள் உடல் தோரணையை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒழுங்காக அமர்ந்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் நீண்ட நேரம் நீங்கள் உடலியக்கம் இல்லாமல் இருப்பதை தவிர்க்க வேலைக்கு இடையே சில எளிய இதமான இயக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்வது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முதுகு தண்டுவடம் நீண்டநேரம் வளைந்த தோரணையில் விறைப்பாக இருக்க கூடாது. எனவே நிமிர்ந்த நேரான உடல் தோரணையை எப்போதும் குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஒத்தடங்கள்


கழுத்து தசைகள் புண்ணாகி இருப்பதால் வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த ஒத்தடங்கள் இந்த உபாதைக்கு தற்காலிக நிவாரணம் கொடுக்க உதவும். தாங்க முடியாத வலி இருக்கும் உடல் பாகங்களில் ஐஸ் பேக்குகள் அல்லது சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அல்லது ஷவரில் குளிப்பது கூட மூட்டுகளில் விறைப்புத் தன்மையையும் வலியை குறைக்கவும் உதவும். சில பிரஷ்ஷான பூண்டு பற்களை எடுத்துக்கொண்டு அதை நசுக்கி கொள்ளவும். ஒரு டேபிள்ஸ்பூன் தாவர எண்ணெயை சூடுபடுத்தி அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து இந்த கலவையை சிறிது நேரம் ஆறிய பிறகு கழுத்து மற்றும் வலி உள்ள பாகங்களில் மசாஜ் செய்ய பயன்படுத்தவும். இது தசைகளில் இறுக்கம் மற்றும் வலியை குறைக்க உதவும்.

மசாஜ்


மசாஜ் தெரபி பெரிதளவில் உதவியாக இருக்கும். மசாஜ் ஸ்பான்டிலிடிஸால் ஏற்பட்ட தசை இறுக்கம் வலி ஆகியவற்றை குறைப்பதோடு அல்லாமல் வலி மிகுந்த நிலையில் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது பொதுவாக ஏற்படும் மன அழுத்தத்தையும் போக்க உதவுகிறது. வெதுவெதுப்பான கடுகு எண்ணெயில் சில கிராம்புகளை சேர்த்து அல்லது கிராம்பு எண்ணையை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

கழுத்துக்கான உடற்பயிற்சிகள்


கழுத்துக்கான உடற்பயிற்சிகள் வலியிலிருந்து நிவாரணம் பெற உங்களுக்கு பெரிதளவில் உதவும். இது உங்கள் தினசரி வேலைகளை செய்வதை சாத்தியமாக்குவதோடு மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவும். ஒரே பக்கமாக பார்த்தபடி உங்கள் தாடையை மார்பை நோக்கி மெதுவாக இறக்கவும். இதே இயக்கத்தை மற்றொரு புறமும் செய்யவும். இப்படி ஐந்து முதல் பத்து முறை செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!