Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 5 ஆகஸ்ட், 2020

வேதநாதர் திருக்கோயில் - திருச்சாட்டியக்குடி


Thiruchattiyakkudi Vedapureeswarar Temple ...
திருச்சாட்டியக்குடி - தல வரலாறு - பாடல் பெற்ற தலம் இல்லை 
இறைவர் திருப்பெயர் : வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர்.
இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி.
தல மரம் : வன்னி
தீர்த்தம் : வேத தீர்த்தம்
வழிபட்டோர் : சாண்டில்ய முனிவர்.
திருவிசைப்பா பாடல்கள் : கருவூர்த்தேவர் - திருவிசைப்பா் .

தல வரலாறு:

மக்கள் வழக்கில் சாட்டியக்குடி, சாத்தியக்குடி என்று வழங்குகிறது.ஊர் - சாட்டியக்குடி; கோயில் - ஏழிருக்கை. ஆறு ஆதாரங்களுக்கும் மேலாகிய ஏழாவது இடத்தை - துவாதசாந்த இருக்கையை, ஏழிருக்கை என்பர். இந்நினைவைத் தரும் வகையில் கோயிலின் பெயர் அமைந்துள்ளது. இதுபற்றியே இத்தலத் திருவிசைப்பா பதிகத்தில் கருவூர்த் தேவர் ஒவ்வொரு பாட்டிலும் "ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே" என்று பாடியுள்ளார். சாட்டியம் (ஜாட்டியம்); வெப்ப மிகுதியால் வரும் சுரநோய். வெப்பநோய்க்குரிய தேவதையாகிய ஜ்வரதேவதை இறைவனை வழிபட்ட தலமாதலின் ஜாட்டியக்குடி (சாட்டியக்குடி) என்று பெயர் வந்தது. சாட்டிய (சாண்டில்ய) முனிவர் வழிபட்ட தலமென்றும் சொல்லப்படுகிறது. (கோயில் பிராகாரத்தில் இம்முனிவரின் சிலாரூப மேனியும் உள்ளது).


சிறப்புக்கள் :

இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.
ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
மூலமூர்த்தி - சிவலிங்கத் திருமேனி; சற்று உயர்ந்த பாணம்; சதுர ஆவுடையார் அமைப்பு.

(குடி - ஊர்) வெப்ப நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இன்றும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுக் குணமடைவது வழக்கில் இருந்து வருகிறது.
அம்பாள் கோயில் தனிக்கோயிலாக உள்ளது. சண்டிகேஸ்வரி மூர்த்தம் வௌ¤யில் இடப்பால் (மண்டபத்தில்) உள்ளது.
இக்கோயில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்பர்.
நித்திய வழிபாடுகள் நன்கு நடைபெறுகின்றன. நாள்தோறும் நான்குகால வழிபாடுகள்.
மாசிமக உற்சவம் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி விழாவும் இத்தலத்தில் சிறப்புடையது.
(அண்மையிலுள்ள கீழ்வேளூர், கச்சனம், திருத்துறைப்பூண்டி முதலியவை திருமுறைத் தலங்களாகும்.)



போன்:

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருவாரூர் கீழ்வேளூரிலிருந்து (கீவ) கச்சினம் வழியாகத் திருத்துறைப்பூண்டிக்கு செல்லும் வழியில் இத்தலம் உள்ளது. மேலும், திருவாரூரிலிருந்து தேவூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் தேவூரை அடுத்துச் சாலையோரத்தில் சாட்டியக்குடி உள்ளது. பிரதான சாலையிலிருந்து சற்றுத் தள்ளி, உள்ளே கோயிலிருக்கிறது. கோயில் வரை பேருந்து செல்லும்.

ஸ்ரீவேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சாட்டியக்குடி (சாத்தியக்குடி), கொல்லிடம் தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
வெப்ப நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இன்றும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுக் குணமடைவது வழக்கில் இருந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக