Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

விமான பயணத்தின் போது முகக்கவசங்களை அகற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

விமான பயணத்தின் போது முகக்கவசங்களை அகற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?
இந்த செய்தியைப் படித்தால் விமான பயணத்தின் போது முகக்கவசம்  பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பது புரியும். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஸ்பெயினின் இபிசா தீவுக்கு சென்ற KLM விமானத்தில் முகக்கவசம் ஏற்படுத்திய பரபரப்பு உலகெங்கும் வைரலாகிறது...  
விமானத்தில் பயணித்த ஒருவர் முகமூடி அணியவில்லை. கொரோனா வைரஸின் ஆபத்தை சுட்டிக்காட்டிய பிற பயணிகள் அவரை Mask அணியுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் அதை ஒத்துக்கொள்ளவில்லை. வாக்குவாதம் முற்றி விமானம் மீன் மார்க்கெட்டாக மாறியது.  
குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பரும் முகக்கவசம் அணியவில்லை. இருவரும் பிற பயணிகளுடன் நீண்ட நேரம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் விமானிக்கு தெரியவந்தது.  அவர் எடுத்துச் சொல்லியும் கேட்காத இரு நண்பர்களும் பிடிவாதமாக இருந்தனர். இதற்குப் பிறகு, பொறுமை எல்லை மீற வாக்குவாதம், அடிதடியாக மாறியது. 
பறக்கும் விமானத்தில் நண்பர்கள் இருவரும் தர்ம அடி வாங்கினார்கள். விமானத்தில் குழப்பம் ஏற்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர். விமானம் தரையிறங்கிய பிறகு, நண்பர்கள் இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
கொரோனா தொற்றுநோய் பரவலால்,  பயணிகள் முகக்கவசம் அணியவேண்டும் என்பதை விமான நிறுவனங்கள்  கட்டாயமாக்கியுள்ளன.  இந்த பயணிகள் இருவரும் விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே முகக்கவசத்தை அகற்றினர். இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த பயணிகள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், பயணிகள் இரு இளைஞர்களையும் அடித்த விதத்தைப் பார்த்தால் கொரோனாவின் அச்சம் எப்படி பரவியிருக்கிறது என்பது புரிகிறது. விமானத்தில் பயணிக்கும் கனவான்களும், சந்தர்ப்பம் ஏற்பட்டால் அடிதடிக்கும் அஞ்சமாட்டார்கள் என்பதை பார்த்து உஜராகிவிடுங்கள்... 
பிற பயணிகள் முகக்கவசம் அணிவது குறித்தும் பலர் சமூக ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'விமானத்தில் உள்ள பல பயணிகள் முகக்கவசங்கள் முறையாகவும், சரியாகவும் அணிவதில்லை. அது முகக்கவசம் அணியாததற்கு சம்மாக இருக்கிறது.    முகக்கவசம் சரியாக அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதா '? என்று Zo என்பவர் கேள்வி எழுப்புகிறார்.
“Stoppen nu, er zijn kinderen hiero!”Knokpartij op @klm vlucht naar Ibiza. Dronken passagier weigert mondkapje te dragen
Panic and violent brawl! Unruly passenger on board KLM flight,he refused to wear face mask #incident #klm #avgeek #aviation #planespotting @KLM_press pic.twitter.com/RPM0g1Kqh9
— The Mic High Club Luchtvaart Podcast (@MicHighClub) August 2, 2020
KLM விமானத்தில் முகக்கவசம் அணிய முரண்டு பிடித்த இரண்டு இளைஞர்களும் போதையில் இருந்ததாகவும், பலமுறை சொன்ன பிறகும் முகக்கவசம் அணியவில்லை என்றும் பிற பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, சண்டை போட்டார்கள்.  மனிதர்களுடன் சண்டை போடலாம். ஆனால் கொரோனாவுடன் போடலாமா?
இறுதியில் இரண்டு நண்பர்களின் பயணமும், சிறைக்கம்பிக்கு பின்னால் சென்று முடிந்துவிட்டது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக