சியோமி
நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது,குறிப்பாக
இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது
என்றுதான் கூறவேண்டும். மேலும் அன்மையில் இந்நிறுவனம் தனதுஸ்மார்ட்போன்களுக்கு
அடுத்த தலைமுறை எம்ஐயுஐ 12 அப்டேட்டினை வெளியிட்டு வருகிறது.
மேலும்
பெரும்பாலான ரெட்மி மற்றம் போக்கோ சாதனங்களுக்கு எம்ஐயுஐ12 அப்டேட் வழங்கப்படும்
என்றாலும் கூட இவை அனைத்திற்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படாது.
குறிப்பாக
ஆண்ட்ராய்டு 11 ஸ்டேபில் வெர்ஷன் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சியோமிஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ 11
இயங்குளத்தை வெளியிட துவங்கும். பின்பு எம்ஐயுஐ மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்களை
வழங்க சியோமி வரையறைகளை பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவந்த
தகவலின்படி சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எம்ஐ சீரிஸ் இரண்டு ஆண்ட்ராய்டு
அப்கிரேடுகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரெட்மி நோட் சீரிஸ்
மாடல்களுக்கு ஒரு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு
11 அப்டேட் பெற இருக்கும் சாதனங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி
நிறுவனத்தின் எம்ஐ 10, எம்ஐ 10 ப்ரோ, எம்10 யூத் எடிஷன், எம்ஐ சிசி9 ப்ரோ, எம்ஐ
நோட் 10 சீரிஸ், எம்ஐ நோட் 10 லைட், எம்ஐ 10 லைட் 5ஜி மற்றும் எம்ஐ ஏ3 போன்ற
சாதனங்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்பட உள்ளதாக தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு
இதேபோன்று எம்ஐ 9, எம்ஐ 9 ப்ரோ 5ஜி, எம் 9 எஸ்இ, எம்ஐ சிசி9 / எம்ஐ 9 லைட் மற்றும்
எம்ஐ சிசி9 மெய்டூ எடிஷன் போன்ற சாதனங்களுக்கு இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட்
வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
ரெட்மி கே30 ப்ரோ,போக்கோ எஃப்2 ப்ரோ, ரெட்மி கே30, போக்போ எக்ஸ்2, ரெட்மி கே3 5ஜி,
ரெட்மி கே30 ரேசிங் எடிஷன்,ரெட்மி கே30ஐ 5ஜி, ரெட்மி 10எக்ஸ் ப்ரோ, ரெட்மி 10எக்ஸ்
5ஜி, ரெட்மி 9, ரெட்மி 9சி, ரெட்மி 9ஏ, போக்கோ எம்2 ப்ரோ போன்ற சாதனங்களுக்கும்
ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக