Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

மூன்று திருமணம்; மூன்று கணவர்கள்; மூன்று வரதட்சணை வழக்குகள்! – தெலுங்கானாவின் சர்ச்சை பெண்!

wedding match
தெலுங்கானாவில் பெண் ஒருவர் தொடர்ந்து மூன்று பேரை திருமணம் செய்து மூன்று பேர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மனகொடூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ரவளி. கடந்த 2015ம் ஆண்டு சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்த இவர் மூன்றே மாதங்களில் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். அதை தொடர்ந்து சுரேஷிடமிருந்து மூன்று லட்சம் இழப்பீடாக பெற்றுக் கொண்டு அவரை விவாகரத்து செய்துள்ளார்.

பிறகு கொய்யூறு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ரவளி மணமாகி ஐந்தே மாதங்களில் அவர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவரிடம் மூன்று லட்சம் இழப்பீடாக பெற்றுக் கொண்டு மீண்டும் விவாகரத்து.

தற்போது மூன்றாவதாக சுரேஷ் என்ற இன்னொரு நபரை திருமணம் செய்துள்ளார். திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் வரதட்சணை புகார். இத போலீஸார் ஏற்காததால் ரவளி தண்ணீர் தொட்டி மீது ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இரண்டாவது கணவர் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மூண்றாவது கணவரை திருமணம் செய்யும் போது ரவளி கர்ப்பமாக இருந்ததாகவும் அது தெரிந்தே மூன்றாவதாக சுரேஷ் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக