இந்தியா
சீனா இடையேயான பதற்றம் இன்னும் குறையாத இந்த நேரத்தில், இன்னும் இரு தரப்பினரிடையே
சூமூக நிலை ஏற்பட்ட பாடில்லை.
கடந்த
ஜூன் மாதம் இந்தியா சீனா எல்லையில் ஏற்பட்ட மோதலில், 20 இந்தியா ராணுவ வீரர்கள்
வீரமரணம் அடைந்தனர். அப்போது ஆரம்பிக்கப்பட்ட பிரச்சனையானது தற்போது வர்த்தக
ரீதியாகவும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
சீனா
இந்தியாவுடன் தான் பிரச்சனை என்றில்லை. மறுபுறம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு
இடையிலான பதற்றமும் அதிகரித்து வருகிறது.
ஆயுத விற்பனையை
அதிகரிக்க திட்டம்
இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில்
இருந்து வரும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகளும்
நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆயுத
விற்பனையை இந்தியாவுக்கு அதிகரிக்க அமெரிக்கா எதிர்பார்ப்பதாக ஒரு ஊடக அறிக்கை
ஒன்று தெரிவித்துள்ளது.
அதிகரித்துக்
கொண்டே செல்லும் பிரச்சனை
லடாக்கில் ஆரம்பித்த இந்த
பிரச்சனையானது இன்று வரையில் புகைந்து கொண்டே தான் உள்ளது. இந்த பிரச்சனையில்
இந்திய வீரர்கள் 20 பேர் பலியானதாக கூறப்பட்டாலும், சீனா தரப்பில் எத்தனை பேர்
என்பது வெளியாகவில்லை எனலாம். எனினும் அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையின் படி,
சீனா வீரர்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 35 என்றும் கூறப்படுகிறது. எனினும் சீன
தரப்பில் இது குறித்தான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
இந்தியாவுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்க திட்டம்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும்
இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், டிரம்ப் தலைமையிலான நிர்வாகம்
இந்தியாவுக்கு ஆயுதங்களை அதிகளவில் விற்பனை செய்ய உள்ளதாக, அமெரிக்கா அதிகாரிகள்
ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்திய
மாதங்களாக அமெரிக்கா இந்தியாவுக்கு புதிய ஆயுத விற்பனையின் அடித்தளத்தினை
அமைத்துள்ளதாகவும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
என்னென்ன ஆயுதம்?
இதன் மூலம் நீண்ட கால ஆயுத அமைப்புகாள்
உட்பட அதிக அளவு தொழில் நுட்பம் மற்றும் அதி நவீன ஆயுதம், ட்ரோன்கள் என பலவும்
அடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா போன்ற வெளி நாட்டு பங்காளிகளுக்கு இராணுவ
டிரோன்களைத விற்பனை செய்வதை கட்டுப்படுத்தும் விதிகளை, அமெரிக்கா அதிபர் டொனால்டு
டிரம்ப் திருத்தம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக