Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 5 ஆகஸ்ட், 2020

இந்த ஆண்டு தொடரில் இருந்து ஐபிஎல் ஸ்பான்சர் விவோ வெளியேற முடிவு

இந்த ஆண்டு தொடரில் இருந்து ஐபிஎல் ஸ்பான்சர் விவோ வெளியேற முடிவு

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 13 வது ஐபிஎல் (13th IPL) தொடரில் இருந்து விலகி கொள்வதாக ஐபிஎல் ஸ்பான்சர் விவோ (VIVO) முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பல விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதில் கிரிக்கெட் தொடர்களும் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா கிரிக்கெட் வாரியம் சார்பாக நடத்தப்படும் ஐ‌பி‌எல் தொடர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
ஆனால் கொரோனா அச்சம் காரணமாக, இந்த வருட ஐ‌பி‌எல் 13 வது (IPL 13) சீசன், முன்பு அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடத்த முடியாது என தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த வருடம் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை தொடர் 2021 அல்லது 2022 ஆம் ஆண்டு நடைபெறும் எனக்கூறி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த வருட IPL 2020 தொடர் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என BCCI அறிவித்தது. ஆனால் இங்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது எல்லையில் சீனாவுடனான மோதலை அடுத்து நாட்டில், சீனா பொருட்களை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அதேநேரத்தில் மத்திய அரசு சீனா செயலி உட்பட பலவற்றுக்கு தடை விதித்தது.
ஆனால் ஐபிஎல் போட்டிக்கு ஸ்பான்சராகா இருக்கும் விவோ நிறுவனத்தையும் தடை செய்ய வேண்டும் எனக்கோரிக்கை எழுந்தது. இதனையத்து இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக கடந்த ஞாயிறு அன்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 
அந்த முடிவுகளில் ஒன்று ஐபிஎல் ஸ்பான்சராக விவோ என்கிற சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடரும் என பிசிசிஐ (BCCI) முடிவு செய்தது.
ஆனால் தற்போது தீடிரென, ஐபிஎல் போட்டி ஸ்பான்சர் பொறுப்பில் இருந்து, இந்த வருடம் மட்டும் விலகவுள்ளதாக விவோ நிறுவனம்  பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக