தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!
அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் 10 சதவீதத்தை உடனே கட்ட வேண்டும் என்று தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீர்செய்யப்பட்ட மொத்த வருவாயை செலுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 92,000 கோடி ரூபாயை தவணை முறையில் செலுத்த அனுமதிக்க கோரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக