Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

7000mAh பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி M51 அறிமுகம்: என்ன விலை?

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஜெர்மனி இணையதளத்தில் முன்பதிவு செய்யவும் கிடைக்கிறது.

அந்த வலைத்தளத்தின்படி, சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் ஆனது குவாட் ரியர் கேமரா அமைப்பு, ஹோல் பஞ்ச் டிஸ்பிளே மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான அம்சமாக அதன் மிகப்பெரிய 7,000 எம்ஏஎச் பேட்டரி திகழ்கிறது. இது 25W க்விக் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அமேசானில் தனது கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை டீஸ் செய்யத் தொடங்கியுள்ளது. இது செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 51 எதிர்பார்க்கப்படும் இந்திய விலை நிர்ணயம்:

சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் ஜெர்மனியில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.31,500 க்கு அறிமுகமாகி உள்ளது. இது 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விளையாகும். கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25,000 முதல் ரூ.30,000 க்குள் எங்காவது ஒரு புள்ளியில் அமரலாம் என்று எதிர்பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 51 விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் அளவிலான புல் எச்டி + சூப்பர் அமோலேட் + இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஹோல் பஞ்ச் கட்அவுட் ஆனது டிஸ்பிளேவின் மேல் மையத்தில் அமைந்துள்ளது மற்றும் அதில் ஒரு செல்பீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது என்று சாம்சங் கூறுகிறது, ஆனால் இந்த தென் கொரிய நிறுவனம் சிப்செட்டின் பெயரை இதுவரை வெளியிடவில்லை. குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 SoC உடன் இந்த ஸ்மார்ட்போன் வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி விரிவாக்கக்கூடிய 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் Android 10 ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த OneUI மூலம் இயங்குகிறது.


கேமராக்களை பொறுத்தவரை, 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பு (எஃப் / 1.8 லென்ஸ்) உள்ளது. உடன் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் (123 டிகிரி பீல்ட் ஆப் வியூ) + 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், செல்பீக்களுக்காக ஒரு 32 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 25W க்விக் சார்ஜிங் ஆதரவு கொண்ட ஒரு பெரிய 7,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக