Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

முதல்வன் முதல் அனேகன் வரை.. தளபதி விஜய் மிஸ் செய்த 6 சூப்பர்ஹிட் படங்கள்

விஜய் சமீபத்திய வருடங்களில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் சினிமா துறையில் டாப் இடத்தை பிடித்திருக்கிறார். படத்திற்கு படம் அவரது பாக்ஸ் ஆபிஸ் வசூலும் அதிகரித்து கொண்டிருக்கிறது. அவரது படம் தொடங்குகிறது என்றாலே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுகிறது.

ரிலீஸ் ஆகும் போது அதை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுகிறார்கள். அவருடன் பணியாற்ற வேண்டும் என்று டாப் இயக்குனர்கள் உட்பட பலரும் காத்திருக்கிறார்கள். அவரிடம் கதை சொல்லி அவருடன் பணியாற்ற காத்திருக்கும் இயக்குனர்கள் பலர். அப்படி விஜய்யிடம் கதை சொல்லி அவர் நிராகரித்து அதற்கு பின்பு வேறொரு ஹீரோ நடித்து சூப்பர் ஹிட்டான படங்களை பற்றி பார்ப்போம்.

அனேகன்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து இருந்த படம் தான் அனேகன். ஹீரோயினாக அமைரா நடித்திருந்தார். இந்த படத்தின் கதையை எழுதி முடிக்கவே கே.வி.ஆனந்துக்கு நான்கு மாதங்கள் ஆனதாம். அதற்கு பிறகு கதையை முதலில் அவர் விஜய்யிடம் கூறியிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் ஜில்லா மற்றும் கத்தி ஆகிய படங்களை விஜய் கைவசம் வைத்திருந்தார்.

அதனால் அனேகன் கதை அவருக்கு அதிகம் பிடித்திருந்தாலும் அதற்கு தேதி ஒதுக்க முடியாத சூழ்நிலை எழுந்தது. காத்திருந்தாலும் ஒன்றரை வருடங்கள் நிச்சயம் ஆகும் அதனால் விஜய் தான் தனுஷின் பெயரை பரிந்துரைத்தார் என்று கே.வி. ஆனந்த் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

விஜய் சொன்னது போல தனுஷை கே.வி. ஆனந்த் நடிக்க வைத்து, அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிங்கம்

2011 வெளிவந்த சிங்கம் படத்தினை ஹரி இயக்கி இருந்தார். சூர்யா போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து இருந்த சிங்கம் படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்று பிரம்மாண்ட வசூல் ஈட்டியது. அதற்குப் பிறகு சிங்கம் படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை ஹரி இயக்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். உண்மையில் சிங்கம் படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று தான் ஹரி முதலில் முயற்சித்திருக்கிறார். ஆனால் ஏதோ சில காரணங்களால் விஜய் அந்த படத்தை மறுத்திருக்கிறார். இந்த படம் வெளிவந்து ஒன்பது வருடங்கள் ஆகும் நிலையில். அதற்குப் பிறகு விஜய் ஹரி உடன் ஒருமுறை கூட கூட்டணி சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டக்கோழி


லிங்குசாமி இயக்கத்தில் 2005ல் வெளிவந்த சண்டக்கோழி படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. அதன் பிறகு மேலும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது அந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஹீரோவாக நடிக்க சூர்யாவை முதலில் அணுகி இருக்கிறார் லிங்குசாமி. அவர் அதில் நடிக்க மறுக்கவே விஜய்க்கு அந்த கதை சென்றிருக்கிறது. அவரும் அதில் நடிக்க மறுத்துவிட்டார். காரணம் படத்தின் இரண்டாம் பாதியில் அப்பா கதாபாத்திரத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்பதால் தான். விஜய் நிராகரித்த பிறகு தான் விஷால் அதில் நடித்திருக்கிறார். படமும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

ஆட்டோகிராப்


சேரன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் உருவான ஆட்டோகிராஃப் படம் ஒருவரது வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் வரும் காதல் மற்றும் காதல் தோல்வி ஆகியவற்றை மிகவும் அழகாக காட்டி இருந்தது. இந்த படத்தில் நடிக்க விஜய் உட்பட பல முன்னணி ஹீரோக்களை அவர் அணுகி இருக்கிறார். ஆனால் இறுதியில் அவரே ஹீரோவாக நடிக்க முடிவு எடுத்துவிட்டார். இந்த படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இதற்கு நல்ல வரவேற்பு தான் கிடைத்தது.

ஆட்டோகிராப் ரிலீஸ் ஆன பிறகு விஜய் சேரனை அழைத்து பாராட்டினாராம். அடுத்து நாம் ஒன்றாக ஒரு படம் பண்ணலாம், ஒரு கதை தயார் செய்யுங்கள் என கூறி இருக்கிறார். ஆனால் சேரன் அப்போது வேறொரு படத்தில் பிஸியாக இருந்ததால் விஜய் தந்த வாய்ப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அது பற்றி சமீபத்தில் சேரன் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்


லிங்குசாமி இயக்கி இருந்த ரன் படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் மெயின் ரோல்களில் நடித்திருந்தனர். மேலும் ரகுவரன், விவேக், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நடிக்க விஜய்யை தான் லிங்குசாமி முதலில் அணுகி இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் விஜய் அதில் நடிக்கவில்லை. அதற்கு பிறகு மாதவன் அந்த ரோலில் நடித்து படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. ரன் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. லிங்குசாமி கெரியரில் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக தற்போதும் பேசப்படுகிறது அது.

முதல்வன்


1999 இல் வெளிவந்த முதல்வன் படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். ஷங்கர் இயக்கியிருந்த அந்த படத்தில் ஒரு நாள் முதல்வராக மாறும் அர்ஜுன் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் படத்தின் கதையாக இருக்கும். இந்த கதையை ஷங்கர் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூறியிருக்கிறார். அதன் பிறகு நடிகர் விஜய்யை அணுகி முதல்வன் படத்தில் நடிக்கும் படி கேட்டிருக்கிறார். ஆனால் விஜய் அதில் நடிக்க மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவர் அரசியல் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என கூறிவிட்டாராம். அதற்குப் பிறகு தான் அதில் அர்ஜுன் நடித்து மிகப்பெரிய ஹிட் ஆனது முதல்வன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக