Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

ஆறுமாதம் வரை குழந்தைக்கு பாதுகாப்பான பொம்மையை தேர்வு செய்வது எப்படி? எது நல்லது?

பிறந்த குழந்தைக்கு அம்மா, அப்பாவை அடுத்து எல்லாமே பொம்மை தான். குழந்தைக்கு புரிதல் தொடங்கும் காலத்திலேயே எல்லாமாய் பொம்மைகள் இருந்துவிடுகிறது. குழந்தை பேச தொடங்கிய பிறகு பொம்மையோடு உறவாடுவது எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் குழந்தை மூன்று மாதங்களுக்கு பிறகு பொம்மையோடு விளையாட தொடங்கிவிடுகிறது.

குழந்தைக்கு மூன்று மாத காலமாக இருந்தால் அப்போது வண்ணமயமான பொம்மைகளை வாங்கி தரலாம். பொம்மை குழந்தை கையில் கிடைக்க வேண்டும் என்பதில்லை. குழந்தை பொம்மையை பார்க்கும் படி இருந்தால் போதுமானது.

அதிலும் பொம்மை சுற்றுவது போன்று இருக்கலாம் ( மேளம் அடிப்பது, பீப்பி ஊதுவது, டிக் டிக் சத்தம் வருவது, மென்மையான இசையை கொண்டிருப்பது) இவை எல்லாமே குழந்தைக்கு ஒரு புது உற்சாகத்தை தரும் வகையில் இருக்கும். அதனால் தான் குழந்தையின் தூளியில் அழகான கொலுசு சத்தத்தோடு கூடிய கிலுகிலுப்பை தொங்கவிடுவதுண்டு. இத்தகைய பொம்மை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

பிளாஸ்டிக் பொம்மையை தவிர்க்க வேண்டும்

பொம்மை என்றாலே பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பொம்மை வகைகள் தான் அதிகம் பயன்படுத்திவருகிறோம் ( தற்போது ப்ளாஸ்டிக் பொருள்கள் மீது முழு தடை விதிக்கப்பட்டுள்ளது) இந்த விதமான பொம்மைகளை குழந்தைகள் வாயில் வைப்பதால் பிளாஸ்டிக் பொருள்களின் நச்சு குழந்தையின் வயிற்றுக்குள் சென்றுவிட வய்ப்பு உண்டு.

அதிலும் குழந்தைக்கு பல் முளைக்கும் காலத்தில் ஈறுகளில் அரிப்பு இருக்கும் போது பொம்மையைத்தான் கடித்து இழுப்பார்கள்.

கட்டையால் செய்யப்பட்ட பொம்மைகள்

குழந்தையின் பல் ஈறுகளை பாதிப்புக்குள்ளாக்காத டீத்திங் டாய்ஸ் பிரத்யேகமாக கட்டையால் செய்யப்பட்டு கிடைக்கும். அதை வாங்கி கொடுக்கலாம். அதுபோலவே பாதிப்புக்குள்ளாக்காத மிருதுவான டாய்ஸ், டெக்ஸ்சர் பால்ஸ் கைவிரல்களில் மாட்டிகொள்ளும் ரிங் டாய்ஸ் என ஆறுமாத குழந்தைகள் வரை விளையாடுவதற்கான டாய்ஸ் வகைகள் வாங்கித்தரலாம்.

குறிப்பாக பாரம்பரியமாக 

குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் வாங்கி தரலாம். கருங்காலி ம்ரத்தில் செய்யப்படுவதால் இவை குழந்தை வாயில் வைத்து கடித்தாலும் ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்கிவிடாது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். மருத்துவ குணங்கள் நிறைந்ததும் கூட என்பதால் சரியான தேர்வாகவே இவை இருக்கும்.

வண்ணமயமான பொம்மை

பொம்மை வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டியவை
குழந்தைக்கு கிலுகிலுப்பை, ரப்பரால் செய்த பொம்மைகள், கைகளில் மென்மையாக அழுந்தக்கூடிய பொம்மைகள் வாங்கித்தரலாம். பொம்மையில் ஸ்டிக்கர் ஒட்டியோ, அலங்காரம் செய்தோ இருக்க கூடாது. கண்ணாடி போன்ற கூர்மையான பொருள்கள் இருக்க கூடாது. இரும்பால் செய்யப்பட்ட சிறு சிறு கூர்மையான பொருள்களும் இருக்க கூடாது பொம்மை வாங்கினாலும் அதில் இருக்கும் இந்த பகுதியை நீக்கிய பிறகு குழந்தையிடம் கொடுக்க வேண்டும்.


பஞ்சு பொம்மையாக இருக்க கூடாது. 

வெல்வெட் பொருளை கொண்டு செய்யப்பட்ட பொம்மைகள் தவிர்க்க வேண்டும். இந்த மாதிரியான பொம்மைகள் பெரிய அளவில் இருந்தால் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாமல் தள்ளி வைக்க வேண்டும். அதற்கு பதிலாக தொட்டிலில் தொங்கவிடலாம். எக்காரணம் கொண்டு குழந்தையின் கைக்கு அடக்கமாக இருக்க
வேண்டும் என்று சிறிய பொம்மையாக வாங்கித்தர கூடாது. பொம்மை சிறு சிறு துண்டுகளாக இணைக்க கூடியவையாகவோ, தனித்தனியாக கழன்று வரும்படியான பொம்மையாகவும் இருக்க கூடாது. உதாரணத்துக்கு கார் பொம்மையாக இருந்தால் சக்கரம், கதவு, ஸ்டியரிங் போன்றவை தனியாக வரும் பட்சத்தில் அளவில் சிறியதாக இருக்கும் போது அவை குழந்தையின் வாய்க்குள் சென்றுவிட வாய்ப்பு உண்டு.

அழகான பொம்மையை காட்டிலும் உடல் ஆரோக்கியத்தை குறைக்காத தரமான பொம்மையை தேர்வு செய்வதே முக்கியம். கலரான பொம்மைகளே போதும் குழந்தையின் உற்சாகத்தை இரட்டிப்பாக்கிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக