கொரோனா தொற்றுக்கு பின்னர் இப்போது பெரும்பாலான சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நமக்குக் கிடைக்கிறது. குறிப்பாக இந்த நாட்களில் ஆன்லைன் விபரச்சாரம், ஆன்லைன் மோசடி, ஆபாச வீடியோ அழைப்பு போன்ற பல விஷயங்கள் இணையத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் வாட்ஸ்அப் அழகிகளின் அட்டகாசம் தற்பொழுது அதிகரித்துள்ளது. வாட்ஸ்அப் அழகிகளா? யார் இவர்கள் என்ன சமாச்சாரம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வாட்ஸ்அப் மூலம் பேசிய பெண்
ஊரடங்கு நாட்களில் ஆன்லைன் மூலம் தான் பலரும் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். தானே மாவட்டம் பயந்தாரைச் சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இவரும் வீட்டிலிருந்தபடி வேலை செய்து வருகிறார். அண்மையில் இவருக்குத் தெரியாத ஒரு வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வாய்ஸ் கால் வந்துள்ளது. இவருக்கு வந்த அழைப்பின் மறுமுனையில் ஒரு பெண் பேசியிருக்கிறார்.
ஆபாசமாகப் பேச்சுக் கொடுத்து நெருக்கம்
வாட்ஸ்அப்பில் அழைத்துப் பேசிய பெண் இந்த நபரிடம் கொஞ்சி காதலுடன் பேசி இருக்கிறார். சில நாட்களுக்குத் தொடர்ந்து அழைப்பு மூலம் அவரிடம் பேசி நெருக்கத்தை அதிகரித்துள்ளார். அடுத்தகட்டமாக அந்த பெண், வாலிபரிடம் ஆபாசமாகப் பேச்சுக் கொடுத்து, நெருக்கத்தை அதிகரிக்க ஆடையின்றி வீடியோ காலில் உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்திருக்கிறார். தன்னிடம் பேசியது வாட்ஸ்அப் அழகி என்பது தெரியாமல், ஆபத்தான வலையில் வாலிபர் சிக்கிக்கொண்டார்.
பெண்ணின் ஆசை வார்த்தைக்கு மயங்கி வாலிபரும் உணர்ச்சி வசப்பட்டு, வீடியோ காலில் ஆடையின்றி ஜாலியாக பேசி இருக்கிறார். காரியம் முடிந்ததும் அந்த பெண் அழைப்பைத் துண்டித்துவிட்டார். சில மணி நேரத்திற்குப் பின்னர் அந்த பெண் வாலிபரைத் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். கேட்கும் பணத்தை உடனடியாக கொடுக்காவிட்டால் வாலிபரின் நிர்வாண வீடியோ அழைப்பு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதற்கு தான் அந்த கொஞ்சலா?
அதிர்ந்து போன வாலிபர் அப்பெண்ணிடம் கெஞ்சியுள்ளார். வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடாமல் இருக்க உடனடியாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று வாட்ஸ்அப் அழகி மிரட்டியுள்ளார். மேலும், வாலிபர் வீடியோ அழைப்பில் செய்த ஆபாச காட்சிகளை வீடியோவாக அவருக்கு அனுப்பியுள்ளனர். ஆத்திரமடைந்த வாலிபர் வாட்ஸ்அப் அழகியை எச்சரித்துள்ளார். திடீரென மறுமுனையிலிருந்து ஒரு ஆண் நபர் வாலிபரை மிரட்டியுள்ளார்.
திடீரென மிரட்டிய அந்த நபர்
வாலிபரை மிரட்டிய அந்த நபர் தான் ஒரு சி.பி.ஐ. போலீஸ் அதிகாரி என்றும், உடனடியாக கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டால் பிரச்சனை இல்லை என்றும் மிரட்டியுள்ளார். மிரட்டலுக்குப் பயந்து போன வாலிபர் வாட்ஸ்அப் அழகியின் வங்கி கணக்கிற்கு ரூ.37,000 பரிமாறியுள்ளார். மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு அந்த நபர் இன்னும் பணம் வேண்டும் என்று கேட்டு வாலிபரை மிரட்டியுள்ளார். மனமுடைந்த வாலிபர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
வாட்ஸ்அப் அழகியை தேடும் போலீஸ்
அடையாளம் தெரியாத வாட்ஸ்அப் அழகி மற்றும் தன்னை சி.பி.ஐ. போலீஸ் அதிகாரி என்று கூறிய ஆண் நபரை போலீசார் தேடி வருகின்றனர். தற்பொழுது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்து வருகின்றது. உங்களுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்களுக்குத் தெரியாத யாரும் அழைத்துப் பேசினால் அவர்களை நம்பி உங்களிடையே தகவலைக் கொடுக்காதீர்கள்.
உஷார்! வீணாய் சிக்கிக்கொள்ளாதீர்கள்
குறிப்பாகத் தெரியாத பெண்கள் அழைத்துப் பேசினால் உஷாராக இருங்கள், அவர்களே தானாக வந்து பேசினால் கண்டுகொள்ளாதீர்கள். சிறிது நேர ஆசையை காட்டி உங்களை முற்றிலுமாக ஏமாற்றிவிடுவார்கள். இவர்களின் வலையில் மட்டும் சிக்கிவிடாதீர்கள், இல்லை என்றால் வாட்ஸ்அப் அழகிகளிடம் நீங்களும் பணத்தை செலவிட நேரக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக