பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரையில் கடன் வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.
சிறு நிறுவனங்கள் மற்றும் தொழில்
முனைவோருக்கு உதவும் நோக்கத்தில் 2015ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி முத்ரா
யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
மற்றும் கார்பரேட் அல்லாத, வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை
கடன்
வழங்குவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற
வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி
சாராத நிதி நிறுவனங்கள் முத்ரா கடன்களை வழங்குகின்றன.
இந்த முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில்
மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாக மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. ஷிஷு
(Shishu) என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் (Kishor) என்ற பெயரில் ரூ.50,000
முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் (Tarun) என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10
லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. தற்போதைய கொரோனா நெருக்கடி சமயத்தில் இந்த
முத்ரா
கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற நல்ல வாய்ப்பு இருக்கிறது. அதுகுறித்துப் பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறு
கடைக்காரர்களுக்கும் தினசரி வருமானம் ஈட்டுபவர்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் நிறையப் பேருக்கு தங்களது இழப்புகளை ஈடுகட்ட அல்லது ஒரு தொழிலைத்
தொடங்க கடன் தேவைப்படலாம்.
முத்ரா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சொந்தமாக தொழில் தொடங்க அரசாங்கம் உதவுகிறது. இந்தக் கடனை வாங்குவதில் சில நிபந்தனைகளையும் அரசாங்கம் வகுத்துள்ளது. முதல் முறையாகக் கடன் வாங்கும் நபர் மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ.17, 000 வருமானம் ஈட்ட வேண்டும். அதோடு, கடந்த இரண்டு ஆண்டுகள் வரை ஏதேனும் ஒரு வேலையில் இருந்திருக்க வேண்டும். கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர் இந்தியாவின் நிரந்தரக் குடிமகனாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் செய்யும் தொழில் விவசாயமற்றதாக இருக்க வேண்டும். அதாவது விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலுக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்காது. இந்தக் கடனுக்காக எந்தவொரு கார்பரேட் நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது.
புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு
மட்டுமே இந்த கடன் திட்டம் பயனளிக்கும். உங்களுக்கு அருகில் உள்ள வங்கிகளிலேயே இதற்கான
விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தில் அடையாள சான்று, இருப்பிட சான்று, புகைப்படம்,
இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது, சப்ளையர் விபரங்கள், தொழிற்சாலை
இருக்கும் இடம் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
முத்ரா கடன் கிடைத்தவுடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை
மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரெடிட் கார்டு போல நீங்கள் பயன்படுத்தலாம். இந்த அட்டை
மூலமாக கடன் தொகையில் 10 சதவீதம், அதிகபட்சம் ரூ.10,000 வரை பயன்படுத்தலாம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக