ட்ரீம் 11 ஐபிஎல் 2020-ன் இணை ஸ்பான்சராக தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா(விஐ) உருவெடுத்துள்ளது. ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
செப்டம்பர் 19 முதல் தொடங்கும் ஐபிஎல்
கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்து அறிவித்தது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற விளையாட்டு வீரர்கள்
இதற்கான ஏற்பாடுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னதாகவே தொடங்கியது. போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்ற விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு
ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். மறுபுறம் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தோனி விளையாடிய ஒருநாள் போட்டி
கடைசியாக தோனி விளையாடிய ஒருநாள் போட்டி கடந்த வருடத்திற்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் செமி ஃபைனல் ஆகும். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக தோனி களமிறங்கும் ஐபிஎல் தொடர் நடைபெறும் நாட்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
டைட்டில் ஸ்பான்சர் ட்ரீம் 11
ஐபிஎல் 2020 தொடருக்கான டைட்டில் ஸ்பான்சரை ட்ரீம் 11 நிறுவனம் தட்டிச் சென்றது. கொரோனா பரவலால் ஏற்பட்ட இழைப்பை சரிசெய்ய ஒரு ஸ்பான்சரை இரண்டு பார்டனர்களையும் சேர்த்துக் கொள்ள பிசிசிஐ முடிவு செய்தது. முன்னதாக இருந்த விவோ, சீன நிறுவனம் என்பதால் இந்தாண்டு விலகியது இருப்பினும் விவோ 2018-2020 வரை ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
ரூ. 222 கோடிக்கு ஒப்பந்தம்
இதில் டைட்டில் ஸ்பான்சரை ட்ரீம் 11 நிறுவனம் 222 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்த நிலையில், டி-20 பிரீமியர் லீக் நேரடி ஒளிபரப்பு ஸ்பான்சருக்கான உரிமைகளை விஐ பெற்றுள்ளது. டி-20 ஐபிஎல் தொடர் நேரலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் காண்பிக்கப்படும்.
வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா நிறுவனம் ஒன்றிணைவதற்கு முன்னதாக இரண்டு நிறுவனங்களும் ஐபிஎல் போட்டியில் சில நிகழ்வுகளை நடத்தியது. ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட பிறகு சமீபத்தில் விஐ பிராண்டாக உருமாறியது. அதன்பிறகு இரு நிறுவனங்களும் ஸ்பான்சர்ஷிப்பாக கையெழுத்திடும் முதன்முறை இதுவாகும்.
இணை ஸ்பான்சர் ஒப்பந்தம் குறித்த நிதி
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான இணை ஸ்பான்சர் ஒப்பந்தம் குறித்த நிதி புள்ளிவிவரங்களை நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை. தொலைத் தொடர்பு நிறுவனங்களில் புதிதாக பிராண்டை அறிவித்திருக்கும் விஐ தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக