Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

‘நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படாது’: Madras HC

 ‘நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படாது’: Madras HC

நடிகர் சூர்யா (Actor Surya) து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதுவும் போடப்படாது என உயர்நீதிமன்ற (High Court) தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

NEET தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்று சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. NEET குறித்த தனது அறிக்கையில் சூர்யா, `அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ என குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா (Actor Surya) மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் கடிதம் எழுதியிருந்தார். எனினும், சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை (Contempt of Court) தொடர வேண்டிய அவசியமில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு உட்பட 6 நீதுபதிகள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினர்.

இதற்கிடையில், சூர்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் எழுப்பினர்.

இந்த நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்தின் கோரிக்கையை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு நிராகரித்தது. நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்தது.

இது தொடர்பாக நடந்த விவாதத்தில், ஒரு பொது பிரச்சனை குறித்து பேசும்போது கவனமாக இருப்பது அவசியம் என்றும், நீதிபதிகளையோ, நீதிமன்றங்களையோ (Courts) விமர்சிக்கும் அளவிலான கருத்துகளை வெளியிடக் கூடாது என்றும் நீதிமன்றம் நடிகர் சூர்யா (Actor Surya) அறிவுரை வழங்கியுள்ளது.

இந்த முடிவுடன் சூர்யா வெளியிட்ட அறிக்கை குறித்த விவாதங்கள் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக