Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

3.3TB டேட்டா வழங்கும் அசத்தலான ஜியோ திட்டம்.! என்ன விலை? என்னென்ன சிறப்பு.!

ஜியோ நிறுவனம் அன்மையில் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை திருத்தி உள்ளது, குறிப்பாக இப்போது பிராட்பேண்ட் திட்டங்கள் ரூ.399 விலையில் தொடங்குகின்றன. மேலும் மற்ற தனியார் நிறுவனங்களை ஒப்பிடுகையில் ஜியோ நிறுவனம் அனைத்து இணைய வழங்குநர்களை விட மிகவும் மலிவு விலையிலான திட்டங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ஜியோ நிறுவனம் 4K செட்-டாப் பாக்ஸுடன் 150 Mbps வேகத்தில் 30 நாள் இலவச சோதனையையும், கூடுதல் செலவு இல்லாமல் 10 OTT பயன்பாடுகளுக்கும் அனைத்து அணுகலையும் வழங்குகிறது. பின்பு இந்த புதிய சோதனைத் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சோதனை திட்டங்களின் பட்டியல்

ஜியோ பட்டியலில் உள்ள திட்டத்தின் விலை ரூ.1,500-ஆக உள்ளது, இதில் ஜியோ ஃபைபர் 150 Mbps வேகத்தையும் 3.3 TB தரவையும் 30 நாட்களுக்கு வழங்குகிறது மேலும் இது முழு காலத்திற்கும் வரம்பற்ற அழைப்பு நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் எந்தவொரு உள்ளடக்க நன்மையையும் வழங்கவில்லை, அதாவது OTT பயன்பாடுகளுக்கு அணுகல் இல்லை.
கண்டிப்பாக இந்த திட்டம் அதிக டேட்டா தரும் திட்டமாக தான் இருக்கிறது.
 

ஜியோ ஃபைபரின் அடுத்த திட்டமும் 30நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வெளிவந்துள்ளது, இந்த திட்டத்தின் விலை ரூ.2500-ஆக இருக்கிறது. இந்த திட்டம் உங்களுக்கு 150 Mbps வேகம் மற்றும் மாதத்திற்கு 3.3 TB டேட்டாவை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மை, JioCinema, ZEE5 Premium, Sony Liv, Voot, ALTBalaji, Sun NXT, Shemaroo, Lionsgate Play, Hoichoi, மற்றும் Disney + Hotstar VIP போன்ற பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக புதிய ஜியோ பைபர் திட்டங்கள் ஆனது ரூ.399-முதல் துவங்குகிறது, வரம்பற்ற இணையம், சமச்சீர் வேகம் (பதிவேற்ற வேகம் = பதிவிறக்க வேகம்) மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் முதல் 12 கட்டண OTT பயன்பாடுகளுக்கான சந்தா உள்ளிட்ட நன்மைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெளிவந்த புதிய டாரிப்பின் படி ரூ.999திட்டத்தில் இணைபவர்கள் 150 Mbps அதிவேக இணைய சேவை உடன், 11 OTT தளங்களில் சப்ஸ்கிரிப்ஷனும் பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக