Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

மலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஏர்டெல் திட்டம்!!

ரூபாய் 5௦௦க்கு 4G ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியீடு | Digit Tamil

ஜியோவுடன் போட்டியிட மலிவான 4 ஜி ஸ்மார்ட்போன்களைக் கொண்டுவர ஏர்டெல் நிறுவனமும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது!!
ஜியோ போன் 4G 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிகவும்  பிரபலமடைந்து  மிகப்பெரிய மக்கள்  கூட்டத்தை ரசிகர் பட்டாளமாக மாற்றியுள்ளது. ஜியோவுடன் போட்டியிட மலிவான 4G ஸ்மார்ட்போன்களைக் கொண்டுவர ஏர்டெல் நிறுவனமும் தயாராகி வருவதாக செய்திகள் இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளன.
இரண்டு ஆண்டுகளாக, ஏர்டெல் நிறுவனம் இன்னும் பல விற்பனையாளர்களுடன் யோசனையிலேயே உள்ளது என்றும் ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது இந்த செய்தி மீண்டும் இணையத்தில் வலம் வருகிறது. ஏர்டெல் 4G ஸ்மார்ட்போனுக்காக பல விற்பனையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், இது ரூ.2,500 விலைக்குளாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொலைபேசியில் ஏர்டெல்லின் சிம் இன்பில்டாக இருக்கும் என்றும் இலவச தரவு போன்ற சலுகைகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏர்டெல் உள்நாட்டு மொபைல் நிறுவனமான மைக்ரோமேக்ஸ், லாவா மற்றும் கார்பன் மொபைல் போன்ற நிறுவனங்களுடன் மலிவான ஸ்மார்ட்போன்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது, இருப்பினும் இந்த விவகாரம் குறித்து ஏர்டெல் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் இன்னும் பட்டன் தொலைபேசிகளையே பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அவர்களை தங்கள் நெட்வொர்க் சேவைக்கு இழுக்க பல திட்டங்களைக் கொண்டுள்ளனர். எனவே, ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் என்பதும்  நிறுவனத்தின் திட்டங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அதிகாரப்போர்வை அறிக்கையோ நிறுவனத்தின் சார்பில் எந்தவித தகவல்களோ இல்லாதா நிலையில் இது இப்போதைக்கு வெறும் வந்தந்திகள்  மட்டுமே.
ஜியோவின் மலிவான 4G ஸ்மார்ட்போன்: 
இந்த வார தொடக்கத்தில், ரிலையன்ஸ் ஜியோ டிசம்பர் 2020 அல்லது ஜனவரி 2021-க்குள் 10 கோடி மலிவான 4G ஸ்மார்ட்போன்களை வழங்கும் என்று செய்திகள் வெளியானது. தரவு சலுகையும் தொலைபேசியில் கிடைக்கும். ஜியோவின் மலிவான 4G ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கூகிள் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்களில் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூகிள் ஜியோவில் 4.5 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த வளர்ச்சி குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இதன் விலை என்னவாக இருக்கும், என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பதையும் சிறுது  காலம் பொறுத்திருந்து தான் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக