MIT
கல்வி நிறுவனம் சமீபத்தில் கேமரா மற்றும் சென்சார்கள் இல்லாமல் மனிதனின் தூக்க
பழக்கம் மற்றும் அவர்கள் எந்த பொசிஷனில் உறங்குகின்றனர் என்பதை கண்காணிக்கும் ஒரு
புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர். கேமராவும் இல்லாமல், சென்சார்களும் இல்லாமல் இது
எப்படி சாத்தியமானது என்று தெரிந்துகொளுங்கள்.
MIT-ஐ
சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனித உடலின் தூக்க தோரணையைப் பதிவு செய்ய இந்த புதிய
சாதனத்தை உருவாக்கியுள்ளனர். சுவரில் ஒரு மானிட்டரை போல பொருத்தப்படும் இந்த
சாதனம் ரேடியோ சிக்னல்களை பரப்புகிறது. சாதனத்திலிருந்து அனுப்பப்படும் ரேடியோ
சிக்கனல்கள் ரெஃப்ளெட் ஆகி மீண்டும் கருவியை வந்தடையும் பொழுது உறங்கும் நபரின்
தூக்க தோரணையை இந்த சாதனம் சேமிக்கிறது.
தூக்க
தோரணையை கண்காணிக்கக் கூடிய இந்த சாதனம் பல சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
இந்த சாதனத்திற்கு பாடி காம்பஸ் என்று ஆராய்ச்சியளர்கள் பெயரிட்டுள்ளனர். மனிதனின்
தூக்க பழக்கத்திற்கும், அவர்கள் உறங்கும் விதத்திற்கும் அவர்களின்
ஆரோக்கியத்திற்கும் பெரியளவில் சம்பந்தம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக,
உதாரணத்திற்கு, பார்கின்சன் நோயின் வளர்ச்சியை கண்காணிக்க இது பெரியளவில் உதவும்
என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில், படுக்கையில் வயிற்று பகுதி
அழுத்தி படுக்கும் பழக்கமுடையவர்களுக்கு இந்த கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உறங்கும் நபர்களுக்கு epilepsy ஏற்பட்டு
திடீர் மரணம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம்
தனிநபர் உடல்நலத்திற்கு ஏற்றார் போல, பாடி காம்பஸ் அவர்களுக்கு ஏற்ற தூக்க தோரணையை
மாற்றம் செய்ய அறிவுரைக்கிறது. அடுத்தகட்டமாக, பாடி காம்பஸ் பயனர்களுக்கு
அவர்களின் ஆபத்தான படுக்கை பழக்கத்தை எச்சரிக்கை செய்தி அனுப்பும் என்றும்,
உறக்கத்தில் உள்ளவர்களை சரியான பொசிஷனில் உறங்க வைக்கும் மெத்தையையும்
ஆராய்ச்சியாளர்கள் உருவாக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக