இப்போதுவரும்
சில புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது, என்றுதான்
கூறவேண்டும். குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு
உள்ளது. அதேபோல் கடந்த சில வருடங்களில் அனைத்து நாடுகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி சற்று
அதிகளிவில் உள்ளது என்றே கூறலாம்.
அதன்படி
பரபரப்பான நகரத்துக்கு மத்தியில் உள்ள வீடுகள், போக்குவரத்து, கட்டுமான பணிகள் போன்றவற்றால்
ஒலிமாசை எதிர்கொள்வதால் அவற்றை தடுக்க வீடுகளுக்கு ஒலி கவசம் அமைக்கும் அட்டகாச புதிய
தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் கண்டுபிடித்துள்ளது.
அதாவது
சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் தான் இந்த ஒலியை
உருவாக்கி ஒலியை தடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவந்த
தகவலின்படி சிங்கப்பூரில் சிறிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வேகமான ரயில்கள்,
விமானங்கள், கார் ஒலிப்பான்கள் போன்றவற்றால் இரைச்சலை எந்நேரமும் இரைச்சலை எதிர்கொள்வதாக
கூறியுள்ளனர். பின்பு சிறிய குடியிருப்பு என்பதால் ஜன்னல்களையும் மூடி வைத்துவிட்டு
இருக்க முடியாது.
எனவே
அவர்களுக்காக யோசித்து இந்த ஒலி கவசத்திற்கான புதிய தொழில்நுட்பத்தை நான்யாங் பல்கலை
ஆய்வு குழு முயற்சித்துள்ளது. பின்பு இந்த ஒலி கவசம் 24 ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது.
மேலும் அவற்றை குடியிருப்பில் உள்ள ஜன்னல்களில் பொருத்துகின்றனர்.
இது
போக்குவரத்து அல்லது சுரங்கப்பாதை ரயில் போன்ற சத்தம் கண்டறியப்பட்டுள்ளபோது ஸ்பீக்கர்கள்
ஒலி அலையை உருவாக்கி, இரைச்சலை தடுக்கின்றது. மேலும் ஹெட்போன்கள் எப்படி வேலை செய்கிறதோ
அதே போன்று இவை வேலை செய்கின்றன.
இந்த
புதிய கருவிகள் இருந்தால் ஜன்னலை திறந்தே வைத்திருக்கலாம். பின்பு இதில் உள் வரும்
ஒலி அளவு 10டெசிபல்களாக குறைக்கப்படும். இது கணிக்க முடியாத நாய்கள் குறைப்பது போன்ற
உயர் அதிர்வெண் ஒலிகளை தடுக்காது. எனவே ஜன்னல்கள் திறந்து இருந்தால் ஏசி பயன்பாடு குறையும
என்றும் கூறப்படுகிறது. மேலும் தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் குறையும் என்று கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக